காத்திருப்புகள்
மனைவி காத்திருக்கிறாள்...........குழாயடியிலே..!!
கணவன் காத்திருக்கிறான்..........
டாஸ்மார்க் கடையிலே..!!
இருவரும் காத்திருப்பது...........
தண்ணீ(ரு)க்காக..!!!
* * * *
நீ காதலனாயிருந்த வரை..!
காத்திருப்பது கடுப்படிக்கிறது.......
நீ கணவனான பின்..!!
* * * *
அன்னையர் தினம்
அன்னையர் தினம் கொண்டாடும்அரங்கின் அவைத்தலைவரின்
அன்னை மட்டும்
அன்னையர் தினம்
கொண்டாடுவதைவிட்டுவிட்டு
அன்னையை எப்போது
கொண்டாடப்போகிறோம் நாம்..????* * * *
Tweet | |||||
13 comments:
முதல் கவிதை நகைச்சுவையுடன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. அருமை..!!
காத்திருப்பில் 2வது கவிதை. ஹரி சார். பார்த்தால் கண்டிப்பாக இனி காக்க வைக்கமாட்டார்...!! அந்த கவிதையும் அருமை.!!
அன்னையை எப்போது நாம் கொண்டாட போகிறோம் என்று சிந்திக்க வைக்கும் கேள்விகணைகளுடன் கவிதை மிகவும் அருமை..!!!
இது போன்று மேலும் பல சின்னஞ்சிறு கவிதையில் பொருள்பல விளங்கும் வகையில் கவிதைகள் நிறைய படைத்திட வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!!
@ praveenkumar
தங்களின் அனைத்து கருத்துக்களுக்கும் நன்றி சகோதரரே.
தினங்களை கொண்டாடுவதை விட்டுவிட்டு மனங்களை கொண்டாடவதையே நான் என்றும் வரவேற்பேன்.
அன்னையர் தினம் கவிதை அருமை!!!
காத்திருப்புகள்!!! படைப்பு வுன்னுடையதாய் இருந்தால் கவிதை நாயகி நீயாகவும் நாயகன் உன் துணை ஆகத்தான் இருக்கவேண்டுமா என்ன? காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி... பாட்டு வரிகள் நினைவுக்கு வருகிறது!!! பாராட்டுக்கள்!!! --- கடல் கடந்து ரியாதிலிருந்து ஹரி
ஆஹா... அருமை....
என்ற ஒரு வார்த்தையில் பாராட்டை அடக்க முடியவில்லை...
மிக மிக அருமையான சிந்தனையுடன் எழுதப்பட்டுள்ளது...
வாழ்த்துகள்....
@ R.GOPI
நன்றி சகோதரரே. என்ன பெரிய அட்டகாசமான குறும்படம் ரெடிபண்றீங்களா? ரொம்பநாளாய் hardwork பண்றமாதிரி இருக்கே.
ரிலிசை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறோம் அனைவரும்.
சின்னச் சின்னக் கவிதைகள் என்னை சிலிர்க்க வைத்தது....
தொடர்ந்து பதிவிடுங்கள்..
வாழ்த்துக்கள்..
தமிழ்மணத்தில் தங்களுடைய ஓட்டையும் பதிவிடுங்கள்..
@ #கவிதை வீதி# சௌந்தர்
தங்கள் வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி. தமிழ்மணத்தில் ஓட்டை பதிவிடுகிறேன்.
@ #கவிதை வீதி# சௌந்தர்
தங்கள் வருகைக்கும் வழிகாட்டுதலுக்கும் நன்றி. தமிழ்மணத்தில் ஓட்டை பதிவிடுகிறேன்.
உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன்
நேரம் கிடைக்கும் போது பார்க்கவும்.
http://blogintamil.blogspot.com/2011/06/2.html
Post a Comment