Monday 25 April 2011

நிம்மதியான வாழ்க்கை வேண்டுமா?


ஒரு பூங்காவில் குழந்தைகள் சிலர் விளையாடுகிறார்கள். அங்குள்ள இரும்புக் கம்பியைப் பிடித்தபடி சில குழந்தைகள் சுற்றி விளையாடுகிறார்கள். அங்கு என்னைப் போலவே ஒரு அப்பிராணி குழந்தையும் வருகிறது. அதற்கு விளையாட கம்பியில் இடமில்லை. உடனே அது கைகள் இரண்டையும் விரித்தபடி தனியே சுற்றி விளையாடுகிறது.  வேகமாக சுற்ற சுற்ற மற்ற குழந்தைகள் கைபிடியை விட்டு விலகினாலும் திரும்ப உடனே இறுக்கி கம்பியைப் பிடித்துவிடுகிறது.  ஆனால் தனியே கம்பியில்லாமல் சுற்றும் குழந்தை மட்டும் வேகமாக சுற்ற சுற்ற மயங்கி பிடிமானம் இல்லாததால் தலைசுற்றி கீழே விழுந்து விடுகிறது.  காயம் பட்டு விடுகிறது.

இதே போன்றுதான் நாம் அனைவரும் உறுதியான என்றும் நம்மை கைவிடாத இறைவன் என்ற கம்பை பற்றாமல் நான் என்ற அகங்காரம் கொண்டு தனியே இந்த உலகில் மாயையில் சிக்குண்டு அடிபடுகிறோம்.

கம்பன் என்ற நாமம் இறைவனுக்குண்டு.  நம் காஞ்சிபுரத்தில் இறைவன் பெயர் ஏகம்பன் என்பதே.  கம்பன் போன்ற இறைவனை இறுக்கிப்பிடித்திடில், உலகச்சுனாமியிலிருந்து (சுழல், சூறாவளி எல்லாம் பழைய உவமை) உலக மாயை, மயக்கங்களிலிருந்து ரொம்ப சுலபமாக விடுபடலாம்.

”பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”




என்னமாவது பிரச்சினைனு வந்துச்சாக்கும் ஓடிப்போய் ”சிக்கெனப்பிடித்தேன் சிவபெருமானே” என்று அவன் தாள் வணங்கி அங்க இங்க அசைய விடாமல் இறுக்கி பிடிச்சுடுங்க.  அப்புறம் பாருங்க நடக்கிறதை. .........
நிச்சயமாய் சரண்டர் அதாங்க சரணாகதி ஆனப்புறம் எத்தனை பிரச்சனை ஓடிருக்கும் உங்களுக்கே நிறைய அனுபவம் இருக்குமே.... கொஞ்சம் யோசித்துப்பாருங்க.

அருளுடைய சுடரே, ஜோதி மயமானவனே என இறைவனை வணங்குகிறோம்.  சுடர் என்றால் ஒளி. அப்போ சுடர் சுடுமோ என்று ஐயம் வருவது இயல்புதான் . அதனாலேயே அருளுடைய சுடர், ”அருட்பெரும் ஜோதி தனிப் பெரும் கருணை” என்கிறார் இராமலிங்க அடிகள்.

நாங்கள் அவனைப் சிக்கெனப் பிடித்தால், எங்கள் பசித்துன்பம் போகுமோ என்று நீங்கள் கேட்பது புரிகிறது.  வயிற்றுப்பசி மட்டுமல்ல, உயிற்பசியும் சோ்ந்தே போகும்.  இறைவன் இனிப்பான, நன்கு பழுத்த கனி போன்றவன்.
”வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே” என்கிறார் இராமலிங்கர்.

இந்த இறைவனை எங்கதான் கண்டுபிடிக்கிறது என்று கேட்கிறீர்களா?

”தெருளிடத்து அடியார் சிநதையுள் புகுந்த செல்வமே, சிவபெருமானே!”
அதாவது மனம் தெளிவான சிவஞானிகளின் உள்ளக் கோவிலில் இருக்கிறார்.  நல்லா கவனிங்க.......... உங்க மனச தெளிவா வச்சுக்கிட்டா உங்க மனசுக்குள்ளதான்ங்க இறைவன் இருக்கார். புரிஞ்சுச்சா இப்போ....

வெளியே எங்கும் போய் போலிசாமியார்களிடத்தில் ஏமாறாமல், உங்களுக்குள்ளேயே இருக்கிறவரை கெட்டியா பிடிச்சுக்கங்க.... வாழ்க்கையில் மலைபோல் வரும் துன்பம் கூட பனி போல ஓடிடும்ங்க....சரண்டர் ஆகித்தான் பாருங்களேன். சும்மா ஜிவ்வுனு பறக்கற மாதிரி இருக்கா?...... அப்புறமென்ன சும்மா நடத்துங்க உங்க ராஜ்ஜியத்தை!.... 

3 comments:

Anonymous said...

அருமையான எளிமையான தெளிவான கருத்துக்கள்!!! நிம்மதியான வாழ்க்கை அனைவருக்கும் தேவையான ஒன்று அதை தேடி வேறு எங்கும் போகவேண்டாம் மனமே கோவில் என்பதை மிக அழகாக எல்லாருக்கும் புரியும்படி சொல்லியிருக்கிறீர்கள்!!! பாராட்டுக்கள்!!!
--- ஹரி ரியாத்

Praveenkumar said...

மிகவும் சுவாரஸ்யமான ஆன்மீக கட்டுரைப்பகிர்வு. நல்லா இருக்கு தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துகள் அக்கா..!!!

கடம்பவன குயில் said...

@ பிரவின்குமார்

தங்களின் வழிகாட்டுதலும் ஊக்கமுமே நான் தொடர்ந்து எழுத என்னை உற்சாகப்படுத்துகிறது. மிகவும் நன்றி சகோதரரே

Link

Related Posts Plugin for WordPress, Blogger...