Monday 28 February 2011

இயற்கை வாழ்த்து

தமிழுக்கு முதல் வணக்கம். முன்ன பின்ன யோசிக்காம என் வலைதளத்துக்குள் நுழைந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த வணக்கம். நம்ம நண்பர்கள் நிறையபேர் வலைதளத்தை பார்த்தவுடன் எனக்கும் வலைத்தளம் தொடங்கும் விபரீத ஆசை வந்திருச்சுங்க. (ஐயோ பாவம் நீங்க!)  என்ன பண்ண என்னோட கிறுக்கல்களையும் இனி நீங்க வாசித்து, போனாபோகுதுன்னு மன்னிச்சு விட்டுடுங்க. கணினிக்கே நான் கத்துக்குட்டிங்க. இப்போதான் தவழவே கத்துக்கிட்டுருகேன். ஐடியா சொல்லுங்க ஆவலுடன் கேட்டுக்கறேன். தப்ப சொல்லுங்க தவறாம திருத்திகறேன்.  கடவுள் வாழ்த்துகளுடன் பதிவை தொடங்குறேன். ஜூனியரை வாழ்த்தி வழி நடத்துங்கப்பா .


படிமம்:Celestia sun.jpg
ஆதித்தன் : இயற்கையே இறைவன். நம் கண்முன் விரியும் ஆதவனே முதல் ஆண்டவன். இயற்கை நம்மிடம் எதையும் எதிர்பார்பதில்லை. மாறாக தன் கடமையை உலகம் தோன்றிய நாள்முதலாக செவ்வனே செய்துவரும் தன்னலமில்லாத தோழர்கள். இயற்கையோடு இயந்த வாழ்க்கை வாழ்ந்தால் உலக பேரழிவு நேராது.  நாம் அனைவரும் இயற்கையை சீண்டி மாசுபடுதுவதாலேயே இன்னல்கள் பல நேர்கிறது. இனியாவது வாழ்வுதரும் பஞ்சபூதங்களுக்கும் வாழ்த்துசொல்லி வாழ்கையில் உயர்வோம்.


பொன்கதிர்களால் பொழுதை விடியச்செய்து
பொருள் இருப்பவர் இல்லாதவர் பேதமின்றி
பொன்னொளி வாரிவழங்கும் பகலவன்
பொன்னடிகள் போற்றி போற்றி.

அம்புலிக்கே தன்னொளி தந்து
ஈகைக்கே இலக்கணமான
ஈடில்லா இறைவனவன்
ஆதவன் அடிகள் போற்றி.

Link

Related Posts Plugin for WordPress, Blogger...