மழையை ரசிக்காதவர் யாராவது உண்டா? மழைக்கு மயங்காதவர் மாநிலத்தில் யாருமில்லை என்பதே உண்மை. உடலோடு மனதையும், உயிரையும் சேர்த்து சிலிர்க்கவைக்கும் பொல்லாத போக்கிரிப்பயல்.
பால வயதில் காகிதக்கப்பல் விட்டு மகிழ்ந்த வ.உ.சி.கள் நம்மில் நிறையபேர் உண்டு. இப்போ நம் சிறார்களுக்கு சிட்டியில் அந்த வாய்ப்பு ஏது? அடைமழையில் அம்மா அப்பாக்கு தெரியாமல் நனைந்து மகிழ்ந்த கொண்டாட்டங்கள் எத்தனை எத்தனையோ.? ...இப்போகூட கணவருக்கு தெரியாமல் கொட்டுகிற மழையில் நனைவது தனி சுகம்தான். (யாரும் போட்டுகொடுதுடாதீங்கப்பா......) மழைக்கும் எனக்குமுள்ள m-seal பந்தம்தான் கீழே உள்ள பதிவு.
பள்ளிப் பருவத்தில்
பதின்ம வயதினில்
எனக்கே தெரியாமல்
எனைதிருடி தோழியாக்கிகொண்ட
தூறல் மழையே
ஒவ்வொரு முறையும் நீ வருகையிலே
சொட்ட சொட்ட நனைந்தபடி
தட்டாமாலை ஆடிய ஆனந்தம்
எத்தனை எத்தனையோ...............
இன்று ஏக்கப் பெருமூச்சுகளாய்
நினைவலைகள் மட்டுமே என்னுடன்.
என் வாழ்க்கை தாளின்
ஒவ்வொரு வரிகளிலும்
என் வளர்ச்சி கண்டு
களிப்புற்ற தோழனே
வாழ்வின் முக்கிய நிகழ்வுகளில் எல்லாம்
வருகை தந்தென்னை வாழ்த்திச்செல்லும்
வானுலக தேவனே!
நினைவிருக்கிறதா உனக்கு !
பெண்பார்க்க என்னவர்
(பெருங்கூட்டமாய் ?!!!!!!) வந்தபோது
பூமழையாய் பெய்து எனைசீண்டி
பூரிப்படைந்தாய்!
மங்கள நாண் பூட்டும் வேளையில்
கனமழையாய் வந்தென்னை
களிப்புறவே ரசித்துநின்றாய் !
வளைகாப்பு நேரத்தில்
தப்பாமல் வருகைதந்து
அன்னையாய் அரவணைத்து
ஆசிகூறி வாழ்த்திபோனாய்!
பிரசவ சமயத்தில்
பிறழாமல் நீவந்து
ஆறுதல் கூறி வேதனைபோக்கி
ஆதரவாய் நீ நின்றாய்.
உன் ஒவ்வொரு வருகையிலும்
வரவேற்று உன் ஸ்பரிச தழுவலில்
உன்னில் கரைந்து
என்னை மறந்திருந்த
இன்பமான தருணங்கள்
எத்தனை எத்தனையோ!
மற்றொரு பிறவி வந்திட்டால்
உன்னை பிரசவிக்கும்
முகிலாய் நான் மாறி
உன்கடன் தீர்க்க விழைகின்றேன்.
* * * * * *
எடிட்டிங் உதவி : நண்பர் பிரவீன்குமார்
எடிட்டிங் உதவி : நண்பர் பிரவீன்குமார்
Tweet | |||||
24 comments:
ம்.. கவிதையில் கலக்க வாழ்த்துக்கள்...
////
மற்றொரு பிறவி வந்திட்டால்
உன்னை பிரசவிக்கும்
முகிலாய் நான் மாறி
உன்கடன் தீர்க்க விழைகின்றேன்.///
நல்ல ஆசைதான்...
///
எடிட்டிங் உதவி : நண்பர் பிரவீன்குமார் ////
கதை திரைக்தை யாருங்க...
தமிழ் 10 உளவு -வில் இணைச்சாச்சி..
@ சௌந்தர்
2 பக்கத்துக்கு வந்துவிட்டது. ஒரே பக்கமா இணைக்க தெரியல. நம்ம
நண்பர் ப்ரவீன்குமர்தான் உதவிசெய்தார். நன்றி மறக்க கூடாது பாருங்க
நண்பர் ப்ரவீனுக்கு ஒரு ஓஓஓஓஓ போட்டுடுவோமே ப்ளீஸ் .
திரட்டியில் பதிவை இணைத்ததுக்கு நன்றி சார். சிலசமயம் இணைக்க
தடுமாறுகிறேன்.
கவிதை மிகவும் எளிமையான எழுத்துநடையில் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நிறைய எழுத வாழ்த்துகள்...!!
தமிழ் தங்களிடம் விளையாடுகிறது..
ஒவ்வொரு முறையும் நீ வருகையிலே
சொட்ட சொட்ட நனைந்தபடி
தட்டாமாலை ஆடிய ஆனந்தம்
எத்தனை எத்தனையோ.. --- எல்லாருக்கும் இந்த அனுபவம் உண்டா?
மற்றொரு பிறவி வந்திட்டால்
உன்னை பிரசவிக்கும்
முகிலாய் நான் மாறி
உன்கடன் தீர்க்க விழைகின்றேன் --- இதுதாங்க டாப்பு..
கலக்கரே வித்யா!!!! எளிய நடை!!! தெளிவான கருத்துக்கள்!!! தொடருட்டம் உன் பணி!!!
---ரியாத் ஹரி
பகிர்வுக்கு நன்றி..
@ praveen
/கவிதை மிகவும் எளிமையான எழுத்துநடையில் மிகவும் அருமையாக உள்ளது. தொடர்ந்து இதுபோன்று நிறைய எழுத வாழ்த்துகள்...!//
நல்ல இருகுனுதானே சொல்லமுடியும். ஏன்னா எடிடர் நீங்க தானே. நன்றி நண்பரே
@vedanthaangal karun
//ஒவ்வொரு முறையும் நீ வருகையிலே
சொட்ட சொட்ட நனைந்தபடி
தட்டாமாலை ஆடிய ஆனந்தம்
எத்தனை எத்தனையோ.. --- எல்லாருக்கும் இந்த அனுபவம் உண்டா?//
மழையில் தட்டாமாலை ஆடலைனால் குழந்தை பருவமே வேஸ்ட் இல்லீங்களா ?
@harisrivi
//கலக்கரே வித்யா!!!! எளிய நடை!!! தெளிவான கருத்துக்கள்!!! தொடருட்டம் உன் பணி!!!//
கணவர் மெச்சிய மனைவி . நன்றி தல
பகிர்வுக்கு நன்றி..
@kadhar24
வருகைக்கு நன்றி நண்பரே.
//பால வயதில் காகிதக்கப்பல் விட்டு மகிழ்ந்த வ.உ.சி.கள் நம்மில் நிறையபேர் உண்டு.//
அட ஆரம்பமே அதகளமா இருக்கே...
ஆஹா... உங்களின் வாழ்க்கையின் மிக முக்கியமான அனைத்து சந்தர்ப்பங்களிலும் வந்திருந்து வாழ்த்திய அந்த மாமழையை கையெடுத்து தொழத்தான் வேண்டும்..
சூப்பர் பதிவு... கலக்கல் தமிழில்... நல்லா இருக்கு.
வாழ்த்துக்கள்...
கவிதை நல்லாயிருக்கு .. தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.
@ தோழி பிரஷா
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழியே.
@ R.Gopi
வருகைக்கு நன்றி தோழரே.
வலைச்சரத்தில் இன்று இந்த பதிவு. நேரம் கிடைத்தால் வருகை தாருங்கள். தங்களின் கருத்தினையும் தமிழ்மண வாக்கினையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_17.html
பிழை துளியும் இல்லா மழை துளி!
துள்ளி வரும் அந்த வெள்ளி துளிகளில்
வ.வு.சிக்களின் உவகையோடு
எங்களின் கப்பல்களும்!
குடை வேண்டா மழை நாடும்
உள்ளங்கள் இங்கே ஏராளம்!
அடை மழைக்கு காத்திருக்கும் ஐப்பசி!
அது போல வித்யாவின்
கதை.. கவிதை மழைக்கு
காத்திருப்பது எங்கள் பசி!
பிழை துளியும் இல்லா மழை துளி!
துள்ளி வரும் அந்த வெள்ளி துளிகளில்
வ.வு.சிக்களின் உவகையோடு
எங்களின் கப்பல்களும்!
குடை வேண்டா மழை நாடும்
உள்ளங்கள் இங்கே ஏராளம்!
அடை மழைக்கு காத்திருக்கும் ஐப்பசி!
அது போல வித்யாவின்
கதை.. கவிதை மழைக்கு
காத்திருப்பது எங்கள் பசி!
Post a Comment