Friday, 30 September 2011

எங்கெங்கு காணினும் சக்தியடா..!! (Devotional - Navarathri Special - Shakthi)

அன்பான உறவுகளுக்கு வணக்கம்.  மிக மிக நீண்............ட இடைவெளிக்குப்பிறகு உங்களை நவராத்ரி சிறப்பு ஆன்மீகப் பதிவின் மூலம் சந்திப்பதில் பெருமிதப்படுகிறேன். நான் கமெண்ட் வழியாக உங்கள்  அனைவரையும் அனுதினமும் அன்பாய் விசாரித்துதான் வருகிறேன்.

என் பதிவையும் எதிர்நோக்கி, அக்காச்சி பதிவெங்கே என்று அன்பாய் மிரட்டிய சகோதரர்களுக்கும் என் சோகம் அறிந்து அதில் பங்குகொண்ட என் நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என் வருகை இனி சீரான இடைவெளியில் இருக்குமென்று நம்புகிறேன்.
நவராத்திரி ஆரம்பித்தாகி விட்டது. நான் பயங்கர பிஸிதான் பூஜை, சுண்டல் பொங்கல் என்று எக்கச்சக்க ஐட்டம் இருக்கே..  சரி அதிகநாள் கழித்து எழுதும் பதிவு தேவி வழிபாடு பற்றி நவராத்திரி நேரத்தில் எழுதலாமே என்றுதான் ஆரம்பித்தேன்..... இது ஒரு தொடர் பதிவுதான். என்னை ஊக்குவிக்கும் அன்பு உள்ளங்களுக்கு மறுபடியும் என் நன்றிகளை நவில்கிறேன். சரி விஷயத்துக்கு வர்றேன்.

எத்தனை விதங்களில் எத்தனை தேசங்களில் இந்த சக்தி வழிபாடு எந்தெந்த பெயர்களில் நடந்திருக்கிறது, இப்பொழுதும் நடக்கிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யத்தில் மயக்கமே வருகிறது...

இந்தியாவில் பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தேவி வழிபாடு நடந்திருக்கிறது என்பதை மொகஞ்சதாரோ. ஹரப்பா போன்ற இடங்களில் தொல்பொருள் ஆராய்ச்சியில் கிடைத்த தேவி மண் சிலைகள் கூறுகின்றன. சிந்து சமவெளி பகுதிகளில் கிடைத்த சக்தி தெய்வத்தின் சிலைகள் போலவே பாரசீகம், மொசடோமியா, பாலஸ்தீனம், சைப்ரஸ், கிரேக்கம், எகிப்து, துருக்கி முதலிய இடங்களிலும் கிடைத்திருப்பதாக ஆராய்சியாளர் சர் ஜான் மார்ஷல் கூறுகிறார்.

ரிக் வேதத்தில் தேவி ஸூக்தம் என்னும் பகுதியில் அன்னையை உஷஸ், ராத்திரி, அதிதி, வாக், பரந்தி, திஷணா, இடா, வாருணி என்ற நாமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பேரானந்தத்ததை அருளும் பரசிவத்தின் அருள்சக்திதான் பராசக்தி என்று சைவசித்தாந்தம் கூறுகிறது. தந்திர சாஸ்திரங்களில் அம்பிகையை பத்து வடிவங்களில் ”தச மகாவித்யா” என்றே அழைக்கிறது. 

தேவி உபாசகர்கள் அன்னையை ஆறுவிதங்களில் கூறுகிறார்கள். அவை பராசக்தி, ஞானசக்தி, இச்சாசக்தி, கிரியா சக்தி, குண்டலினிசக்தி, மாத்ருகா சக்தி என்பதே அந்த ஆறு சக்திகள். நம் பாரத நாட்டில் பூமி கடல் ஆறு நாடு முதலியனவும் அன்னை தேவியின் வடிவமாகவே நாம் பார்க்கிறோம். 
சக்தி வழிபாடு குறித்து சுவாமி விவேகானந்தர் தம் "கீழைநாடும் மேலைநாடும்" என்ற கட்டுரையில் ”இந்த சக்தி வழிபாடு வெளிப்படையாகவே எங்கும் இருந்து வருகிறது. ரோமன் கத்தோலிக்க மதம் மட்டுமே ஐரோப்பாவில் உள்ளது. அந்த மதத்தில் ஜெஹோவாவோ அல்லது ஏசுவோ அல்லது திரிமூர்த்தியோ இரண்டாவது ஸ்தானம் பெற்றிருக்கின்றனர். அங்கே தாய்க்குத்தான் வழிபாடு. குழந்தை ஏசுவைக் கையில் ஏந்திய தாய்தான் பூஜிக்கப்படுகிறாள். எங்கும் எல்லா இடங்களிலிருந்தும் இரவு பகலாக ”ஆவே மரியா! ஆவே மரியா!” என்ற ஒலிதான் கேட்கிறது” என்கிறார். 

பிரம்மா முதலிய தேவர்களாலும் அறிந்து கொள்ள இயலாதவள் அஜ்ஞேயா, அந்தம் அல்லது முடிவு இல்லாதவள் அனந்தா. எவராலும் கிரகிக்க முடியாதவள் அலஷ்யா. ஆரம்பம் இல்லாதவள் அஜா. எங்கும் ஒருத்தியாக இருப்பவள் ஏகா. ஒருத்தியே பல ரூபமாக இருப்பவள் நைகா என்று தேவி உபநிஷத் கூறுகிறது. 

எங்கும் பரந்து விரிந்துள்ள அவளது நிலையை பூரணி, பராசக்தி, இராஜராஜேஸ்வரி,  மூலப்பிரகிருதி ஆகிய திருநாமங்கள் உணர்த்துகின்றன.  படைத்தலை செய்யும்போது அவள் பிரம்மணி. காத்தலை செய்யும்போது அவளே வைஷ்ணவி. அழித்தலை செய்யும்போது ருத்ராணி எனப்படுகிறாள்.

நவராத்திரியில் வழிபடப்படும் அன்னையின் பல வடிவங்களை இனி வரும் நாட்களில் பார்ப்போம்.....
* * * * * * *

37 comments:

சி.பி.செந்தில்குமார் said...

முதல் பக்தன்

சி.பி.செந்தில்குமார் said...

>>>>நவராத்திரி ஆரம்பித்தாகி விட்டது. நான் பயங்கர பிஸிதான் பூஜை, சுண்டல் பொங்கல் என்று எக்கச்சக்க ஐட்டம் இருக்கே..

சாப்பாட்டு ராமி வாழ்க!

சி.பி.செந்தில்குமார் said...

பக்திப்பழம்போல!!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அக்காச்சி!

ஆன்மீகப் பதிவோடு களமிறங்கும் உங்களை வருக வருக என்று கோலா கொடுத்து வரவேற்கிறேன்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


அப்புறம் உங்கள் சோகம் எனக்கு என்னவென்று தெரியலை. அதனால் தான் கேட்க முடியலை மன்னிக்கவும்,

நிரூபன் said...

வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் சக்தி வழிபாடு பற்றிய தொன்மையான கால அலசல் அருமை!

பிரவின்குமார் said...

இரண்டாம் பக்தன்..!!

பிரவின்குமார் said...

ஆன்மீக தரிசனம் கிடைத்ததை போன்ற உணர்வை அளிக்கும் அருமையான கட்டுரைப் பகிர்வு.

பிரவின்குமார் said...

நவராத்திரி சிறப்பாக வேதகாலத்தை எடுத்து விளக்கியது, தேவி உபாசகர்கள் அன்னையை வழிபட்ட விதம், அன்னை மரியையும் இக்கட்டுரையில் இணைத்தது என கட்டுரை பல்சுவை கலந்ததாகவும், மதஒற்றுமையை விளக்குவதாகவும் பதிவு மிகப்பிரமாதமாக உள்ளதுங்க..!! தொடரட்டும் தங்களது ஆன்மீக பதிவுகள் வளர்பிறையாக.......

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நவராத்திரியில் அழகிய பதிவு...

வந்து கலக்குங்க...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

சக்கி அவதராங்கள்...
தொடர் பதிவாக.. தொடரட்டும்...

வாழ்த்துக்கள்...

Ramani said...

ஆரம்பமே மிக மிக அற்புதம்
ஒரு நீண்ட அருமையான ஆன்மிகப் பதிவை
உறுதியாக எதிர்பார்க்கலாம் என தங்கள்
ஆரம்பப் பதிவே கட்டியம் கூறுகிறது
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

இரண்டாவது பக்தை.

காலநேரம் பார்த்து அழகிய படைப்பு
தந்துள்ளீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்
உங்களுக்கு எல்லா வளமும் கிட்டாடும் .....

அம்பாளடியாள் said...

எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ .......

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ..

மகேந்திரன் said...

சரியாக ஒரு மாத இடைவெளிக்குப் பின்னர் உங்களை பதிவுகளில் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி.

மகேந்திரன் said...

வரலாறு வழியில் சக்தி வழிபாடு அதன் நிறுவாக்கம்
பற்றிய உங்களின் கட்டுரை சிறப்பாக உள்ளது.
தொடருங்கள்
பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம்...

aadhava prakas said...

சக்தி வழிபாடு ஆரம்ப காலத்திலிருந்து தமிழ்நாட்டில் வழக்கத்தில் இருந்து வருகிறது என்பது கொஞ்சம் ஆராய வேண்டியுள்ளது........... ஏனெனில் முற்காலத்தில் சிவன், முருகன், திருமால் வழிபாடுகள் பற்றிய குறிப்புகள் தான் கிட்டியுள்ளன...
சக்தி வழிபாடு பின்னர் தோன்றியிருக்க வேண்டும் என்று எண்ணம் மேலோட்டமாக தோன்றுகிறது.........
தமிழ்நாட்டில் சக்திவழிபாடு பற்றிய சான்றுகள் கிடைத்தால் நன்றாக இருக்கும்

கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

>>>>நவராத்திரி ஆரம்பித்தாகி விட்டது. நான் பயங்கர பிஸிதான் பூஜை, சுண்டல் பொங்கல் என்று எக்கச்சக்க ஐட்டம் இருக்கே..

சாப்பாட்டு ராமி வாழ்க!//


முதல் பக்தனே வம்பு பிடிச்ச பக்தனா?? அட மகமாயி.....

கடம்பவன குயில் said...

@ நிருபன்

//ஆன்மீகப் பதிவோடு களமிறங்கும் உங்களை வருக வருக என்று கோலா கொடுத்து வரவேற்கிறேன்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்புறம் உங்கள் சோகம் எனக்கு என்னவென்று தெரியலை. அதனால் தான் கேட்க முடியலை மன்னிக்கவும்,//

வணக்கம் சகோ..வரவேற்புக்கு நன்றி.

கடம்பவன குயில் said...

@ பிரவின்குமார்

தங்கள் ஊக்கத்திற்கு நன்றி மாஸ்டர்.

கடம்பவன குயில் said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
சக்கி அவதராங்கள்...
தொடர் பதிவாக.. தொடரட்டும்...
வாழ்த்துக்கள்...//


நன்றி சகோ..

கடம்பவன குயில் said...

@ Ramani said...

ஆரம்பமே மிக மிக அற்புதம்
ஒரு நீண்ட அருமையான ஆன்மிகப் பதிவை
உறுதியாக எதிர்பார்க்கலாம் என தங்கள்
ஆரம்பப் பதிவே கட்டியம் கூறுகிறது
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்//

எல்லாம் உங்கள் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம்தான் சார். தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.

கடம்பவன குயில் said...

@ Ramani said...

ஆரம்பமே மிக மிக அற்புதம்
ஒரு நீண்ட அருமையான ஆன்மிகப் பதிவை
உறுதியாக எதிர்பார்க்கலாம் என தங்கள்
ஆரம்பப் பதிவே கட்டியம் கூறுகிறது
தங்கள் பதிவைத் தொடர்வதில் பெருமிதம் கொள்கிறேன்
தொடர வாழ்த்துக்கள்//

எல்லாம் உங்கள் போன்ற பெரியவர்களின் ஆசிர்வாதம்தான் சார். தங்கள் பாராட்டுக்கு நன்றி சார்.

கடம்பவன குயில் said...

@ அம்பாளடியாள்

எல்லா ஓட்டுக்களும் போட்டாச்சு சகோ //

ஜனநாயகக் கடமையை கரெக்டா செய்த உங்களுக்கு என் நன்றிகள். ஆனாலும் அம்பாள் புகழை எழுத உங்களுக்கு நிகர் நீங்களே..

கடம்பவன குயில் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

//நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ.//


நன்றி சகோ....

கடம்பவன குயில் said...

மகேந்திரன் said...

//வரலாறு வழியில் சக்தி வழிபாடு அதன் நிறுவாக்கம்
பற்றிய உங்களின் கட்டுரை சிறப்பாக உள்ளது.
தொடருங்கள்
பதிவுகளுக்காய் காத்திருக்கிறோம்..//

நிச்சயம் சகோ..என்னால் முடிந்தளவு அவள் பெருமை சொல்ல விழைவேன்.

கடம்பவன குயில் said...

@ aadhava prakash

சக்தி வழிபாடு சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கிறது சகோ. கொற்றவை என்ற பெயரில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சக்தி வழிபாட்டைக்குறிப்பிட்டுள்ளார்.

திருமுருகாற்றுப்படையில் வெற்றிவேல் போர்க்கொற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது சக்தி வழிபாடு

கடம்பவன குயில் said...

@ aadhava prakash

சக்தி வழிபாடு சங்க காலத்திலிருந்தே இருந்திருக்கிறது சகோ. கொற்றவை என்ற பெயரில் சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் சக்தி வழிபாட்டைக்குறிப்பிட்டுள்ளார்.

திருமுருகாற்றுப்படையில் வெற்றிவேல் போர்க்கொற்றவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது சக்தி வழிபாடு

விக்கியுலகம் said...

நவராத்ரி வாழ்த்துக்கள் சகோ!

Rathnavel said...

பயனுள்ள பதிவு.

ரெவெரி said...

Welcome back...தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

harisrivi said...

நவராத்திரியில் சக்தி வழிபாடு அருமையான தொகுப்பு!!! பெண்களை தன் கவிதையில் அம்மனின் அம்சமாகவே பாடிய பாரதியின் தலைப்பு மிகப்பொருத்தம். என்னுடைய அன்பான மாமியார் இல்லாத முதல் நவராத்திரி. நவராத்திரி என்றாலே அவர்களின் ஞாபகம் வராமல் இருக்காது. அவர்களின் அந்த ஈடுபாடு முதல் நாளிலிருந்து கடைசி நாள் விஜயதசமி வரை இம்மியளவும் குறையாத பூஜை புனஸ்காரங்கள் கொலு பாடல் சுண்டல் இன்முகத்துடன் உபசரிப்பு etc. etc., அதுவும் மாப்பிள்ளைக்கு ஸ்பெஷல் உபசரிப்பு என்று சொல்வதை விட மேலான வார்த்தை ஒன்று இருந்தால் அது மிகப்பொருத்தமாக இருக்கும். அவர்களின் இடத்தை பூர்த்தி செய்ய அவர்களின் பிரிய மகளான உன்னால் மட்டுமே முடியும். சோகத்தை நினைவுபடுத்தியதற்கு வருந்தி நவராத்திரியை உற்ச்சாகத்துடன் கூடவே புரட்டாசி அனுஷத்தயும் சிறப்பாக கொண்டாட வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
--- ப்ரியமுடன் ஹரி

மாய உலகம் said...

இச்சா சக்தி , கிரியா சக்தி, ஞான சக்தி தெய்வங்களின் நவராத்திரி மகிமையை அழகாக பதிவில் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் சகோ!

சே.குமார் said...

அருமையான கட்டுரைப் பகிர்வு.

இராஜராஜேஸ்வரி said...

நம் பாரத நாட்டில் பூமி கடல் ஆறு நாடு முதலியனவும் அன்னை தேவியின் வடிவமாகவே நாம் பார்க்கிறோம்./

அருமையான பகிர்வும் படங்களும் நவராத்திரிக்கு சிறப்புகூட்டுகின்றன..

பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

raji said...

தங்களின் இந்த பதிவு இன்றைய வலைச்சரத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.நேரமிருப்பின் சென்று பார்க்கவும்.

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_23.html

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களையும் தமிழ்மணத்தில் வாக்கினையும் பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

Link

Related Posts Plugin for WordPress, Blogger...