என்ன தகுதியிருக்கிறது??
தற்போது வெளியாகியுள்ள அவன் இவன் திரைப்படம் வெளிவந்தவுடன் நம் பதிவுலகில் தொடர்ந்து உலாவரும் ஒரு கேள்வியே மேலே நான் குறிப்பிட்டது.
”என்ன தகுதியிருக்கிறது எங்கள் பாலாவை விமர்சிக்க?” என்ன ஒரு கொலைவெறியோட கேள்வி பாருங்க!
பாலா மிகப்பெரிய திறமையான படைப்பாளி என்பதில் யாருக்கும் எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் அவர் என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட ஜீவாத்மாவா?... இல்லை பரமாத்மாவா?. அன்னை சீதாதேவியை தீக்குளிக்க வைத்தது சரியா தவறா என்று கடவுள் ஸ்ரீராமரையே விமர்சனம் செய்து பட்டிமன்றம் வைப்பவர்கள் நாம். நமக்கா பாலாவின் படத்தையும் அவரின் இயக்கத்தையும் விமர்சிக்கும் தகுதியில்லை??
திரைப்படக் கல்லூரி போய் DFD படித்தவர்கள் மட்டும் தான் படம்பார்க்கவும் விமர்சிக்கவும் தகுதியிருக்கிறது என்கிறார்களா? இல்லை 4,5 படம் இயக்கி ஹிட்ஸ் கொடுக்கிற தகுதிவேண்டுமென்கிறார்களா? என்ன தகுதியை எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு சத்தியமா தெரியலைங்க...
ஐயா புண்ணியவான்களே, புண்ணியவதிகளே ஹோட்டலில் காசுகொடுத்து சாப்பிடுபவர்கள் சாம்பாரில் உப்பில்லை என்றாலோ, கூட்டில் காரம் இல்லை என்றாலோ சொல்லக்கூடாதா?? இதற்கு சமையல்கலை தெரிந்திருக்கவேண்டிய அவசியமே இல்லை. நன்றாய் ருசியறிந்து ரசனையோடு (வக்கணையாய்!!?) சாப்பிடத் தெரிந்திருந்தாலே போதுமானது.
அதுபோல்தான் ஒரு இயக்குனரின் இயக்கம், கதை இன்னபிறவற்றை விமர்சிக்க ஒரு இயக்குனராகவோ, கதைவசனகர்தாவாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
காசுகொடுத்து படம் பார்க்கும் யாருக்கும் அந்தப்படத்தையும் இயக்குனரையும் விமர்சிக்கும் உரிமையிருக்கிறது. தன் கை பணத்தை செலவழித்து, நேரத்தையும் செலவழித்து படம் பார்கிற ஒரு தகுதி போதாதா விமர்சனம் செய்ய??
பாலா தன் எல்லா படங்களிலு்ம் விளிம்பு மனிதர்களையே முன்னிலைப்படுத்தி படம் எடுக்கிறாரே. மற்ற கதைக்களத்துக்கும் வாருங்கள். வேறுபட்ட மனிதர்களின் வாழ்க்கையையும் படமெடுங்கள் என்று விமர்சனம் எழுதுவது மாபெறும் கொலைக்கு்ற்றமாம். இப்படி சொல்ல உங்களுக்கு என்ன உரிமையிருக்கிறது. இப்படித்தான், இவர்கள் கதையைத்தான் படமெடுக்க வேண்டுமென்று பாலாக்கு அறிவுரை சொல்ல நீங்கள் யார் ? உங்களிடம் கேட்டுத்தான் படமெடுக்க வேண்டுமென்ற தலையெழுத்து பாலாவுக்கு இல்லை.....இன்னும் என்னென்னவோ வசவுகள் அவன்இவன் திரைப்படத்தை நடுநிலையோடு விமர்சித்த நம் பதிவர்களுக்கு.
நாங்கள் ஒன்றும் பாலாக்கு எதிரி இல்லையே. இன்னும் சொல்லப்போனால் அவரின் தீவிர ரசிகர்கள்தான். அபிமானிகள்தான். ஆனாலும் நம் அபிமான இயக்குனர் ஒரே டைப்பான கதைகளை திரும்ப திரும்ப எடுத்தால் எப்படி? ”பாலா உங்கள் அபரிதமான திறமையை வேறு வேறு கதைகளத்தில் காண்பித்து உங்களின் அடுத்த கட்ட வளர்சிக்கு, அடுத்த உயர்ந்த படிக்கு செல்லுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரே .ஃபிளேவரில் ஐஸ்கீரிம் வேண்டாமே. விதவிதமான ஃபிளேவரில் ரெடிபண்ணி எங்களுக்கு விருந்தளியுங்கள் என்றுதான் கேட்கிறோம். இப்படி கேட்பது ஒரு கொலைக்குற்றமா??
சத்தியஜித்ரே இந்தியாவின் வறுமையைமட்டுமே தன் படங்களில் காண்பி்க்கவில்லையா? சத்யஜித்ரே செய்யலாம் நம் பாலா செய்யக்கூடாதா என்கிறார்கள்.
ஐயா அதத்தானுங்க நானும் சொல்றேன். இந்தியாவுக்கு ஒரு சத்யஜித்ரே போதும். நம்ம பாலா பாலாவாகவே வெவ்வேறு கதைக்களத்துக்கு வரட்டும் என்கிறேன். எவராலும் வெல்லமுடியாத சிகரத்தை பாலா தொடவேண்டுமென்று ஆசைப்படுகிறோம். ஏனென்றால் நாங்களும் பாலாவின் தீவிர ரசிகர்கள்தான். எங்கள் அபிமான இயக்குனரின் இயக்கத்தை விமர்சிக்கும் தகுதியும் உரிமையும் எங்களுக்கில்லாமல் வேறு யாருக்கிருக்கிறது??
பெரிய இயக்குனர்கிட்ட அதிகப்படியாக எதிர்பார்த்து ஒரு ரசிகன் போவதில் தப்பொன்றுமில்லையே?. சேது, பிதாமகன், நந்தா எடுத்தவர்கிட்ட இன்னும் அதிகமாக ஒரு ரசிகனாக எதிர்பார்ப்பதில் என்ன தவறிருக்கிறது?
சாதாரண சொதப்பல் படமோ, மசாலாப்படமோ எடுக்க பாலா என்கிற வித்யாசமான முயற்சியுள்ள அதிதிறமைசாலியான இயக்குனர் எதற்கு? இன்னும், இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் அவரிடம். அதற்கான தகுதி பாலாவிடம் உள்ளது. அவர் படத்தை விமர்சிக்கும் தகுதி, அவர் வளர்சியில் அக்கறைகொண்ட அவரது தீவிர அபிமானிகளான எங்களிடமும் உள்ளது.
எல்லாவற்றுக்கும் மேலாக, காசுகொடுத்து படம் பார்க்கிற தீவிரமான ரசிகர்கள் என்ற தகுதியைவிட வேறென்ன பெரி.........ய தகுதிவேண்டுமென்று சத்தியமாய் எனக்குத் தெரியல.... உங்களுக்குத் தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள் நண்பர்களே!!
Tweet | |||||
25 comments:
முதல் மழை எனை நனைத்ததே
>>
காசுகொடுத்து படம் பார்க்கும் யாருக்கும் அந்தப்படத்தையும் இயக்குனரையும் விமர்சிக்கும் உரிமையிருக்கிறது. தன் கை பணத்தை செலவழித்து, நேரத்தையும் செலவழித்து படம் பார்கிற ஒரு தகுதி போதாதா விமர்சனம் செய்ய??
ஹரி கூட என்ன சண்டையோ .. அண்ணி இன்னைக்கு பொங்கி வழியறாங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்
பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிகர்..அண்ணியை கூட்டிட்டு அவன் இவன் போனவரு படத்துலயே லயிச்சுட்டாராம்.. ஹா ஹா அண்ணிக்கு கோபம் வந்துடுச்சு .. ஹய்யோ ஹய்யோ
எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணும். பார்க்காம்ம இருந்தா விமர்சிக்காம்ம இருப்போமில்லையா.
ஒரு படத்தை விமர்சனம் செய்ய கருத்துத் சொல்ல அதிகபட்ச தகுதி படத்தை காசு கொடுத்து பார்த்தாலே போதும்...
வேற என்ன வேண்டும்...
சபாஷ்...
பொதுவாக ஒரு இயக்குனர் ஒரு கதை களத்தில் இருந்து அடுத்த கதை களத்திற்கு வர பழகிக் கொள்ள வேண்டும்..
அழகிய ஹீரோக்களை அழுக்கிப்படுத்தி பார்ப்பதுதான் பாலாவின் வேலை..
ஒரு படம் பரவாயில்லை.. வரும் படமெல்லாம் அப்படியென்றால் எபபடி..
இங்கு எல்லோரும் பாரட்டாப்படுவார்கள்..
மற்றும் விமர்சிக்கவும் படுவார்கள்..
இதை கேட்க யாருக்கும் உரிமைக் கிடையாது...
அப்படி இல்லையென்றார் படம் எடுத்து அவரே பார்த்துக் கொள்ளட்டும்...
அருமையான அலசல்..
சாட்டையடி கேள்விகள்..
சகோ..
//ஹரி கூட என்ன சண்டையோ .. அண்ணி இன்னைக்கு பொங்கி வழியறாங்களே.. அவ்வ்வ்வ்வ்வ்வ்//
உங்களுக்கு மட்டும்தான் பதிவர் சந்திப்பில் பொங்கி வழியமுடியுமா? நாங்களும் அநீதி கண்டால் பொங்கி வழிவோமுல்ல.
//பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிகர்..அண்ணியை கூட்டிட்டு அவன் இவன் போனவரு படத்துலயே லயிச்சுட்டாராம்.. ஹா ஹா அண்ணிக்கு கோபம் வந்துடுச்சு .. ஹய்யோ ஹய்யோ//
லயிச்சுப்பார்கிற அளவுக்கா படம் இருக்கு. ஏங்க நீங்க வேற ஜோக்கடிக்கிறீங்க.
//பிரச்சனை என்னவா இருக்கும்னா ஹரி அண்ணன் பாலா ரசிகர்..அண்ணியை கூட்டிட்டு அவன் இவன் போனவரு படத்துலயே லயிச்சுட்டாராம்.. ஹா ஹா அண்ணிக்கு கோபம் வந்துடுச்சு .. ஹய்யோ ஹய்யோ//
லயிச்சுப்பார்கிற அளவுக்கா படம் இருக்கு. ஏங்க நீங்க வேற ஜோக்கடிக்கிறீங்க.
//எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணும். பார்க்காம்ம இருந்தா விமர்சிக்காம்ம இருப்போமில்லையா.//
அதானே தலைவரே.
//எதுக்குங்க பாலா படத்தை பார்க்கணும். விமர்சிக்கணும். பார்க்காம்ம இருந்தா விமர்சிக்காம்ம இருப்போமில்லையா.//
அதானே தலைவரே.
@#கவிதைவீதி# சௌந்தர்
//அழகிய ஹீரோக்களை அழுக்கிப்படுத்தி பார்ப்பதுதான் பாலாவின் வேலை..//
அதோடு கூட அவர்கள் நடிப்புத்திறமையை மோசமான படத்தைக்கொடுத்து வீணடித்துவிட்டார்.
நீங்கள் கேட்பது சரி தான் பாஸ்...நமக்கு முழு தகுதியும் இருக்கு...
சாதாரண ரசிகன் கூட கேட்கலாம்!!
நல்ல பதிவு நண்பா
வாழ்த்துக்கள்.......
!!நண்பா எனது பக்கம் லெப்.கேணல் புரட்சிநிலாவின் தொடர் 3 ஓடிக்கொண்டிருக்கிறது
ஓடிவாங்கோ..........
பாலா அவர்களை மிகவும் கிழ்த்தரமாக விமர்சித்தவர்களை மட்டுமே
அந்த கட்டுரை விமர்சித்து உள்ளது. மற்றபடி யாரையும் குறிக்கவில்லை
கம்ப்யூட்டர் முன்னாடி உட்கார்ந்து என்ன வேணாலும் பேசலாம் என்பதற்கு
ஏகப்பட்ட உதாரணங்கள் வாழ்க நீங்கள் அனைவரும்
நான் உங்கள் பக்கம் தான்
Correct question friend. . . Anyone can criticise to anyone
Bala is a Good director . . No doubt about it . . But this film is not fully bala film
//"என்ன தகுதியில்லை நம் பதிவர்களிடம்?"//
//பெரிய இயக்குனர்கிட்ட அதிகப்படியாக எதிர்பார்த்து ஒரு ரசிகன் போவதில் தப்பொன்றுமில்லையே?//
// காசுகொடுத்து படம் பார்க்கிற தீவிரமான ரசிகர்கள் என்ற தகுதியைவிட வேறென்ன பெரி.........ய தகுதிவேண்டுமென்று சத்தியமாய் எனக்குத் தெரியல...//
ஆஹா... சிங்கமொன்று புறப்பட்டதே..
கை கொடுங்கள் சகோதரி...அற்புதம்.
நானும்...
அவன் இவன் இயக்கியது எவன்?
என்ற தலைப்பில் என் கோபத்தை பதிவிட்டுள்ளேன்.அதே தார்மீகக்கோபத்தை உங்கள் பதிவிலும் கண்டேன்.
பாலாவுக்கு சரியான வேப்பிலை அடி.
வேப்பிலை எதற்க்கு அடிப்பார்கள் என்பதை புரிந்து கொண்டால் பாலாவின் தொண்டர்களுக்கு கோபம் வராது.
உலகசினிமா பார்க்க ஆங்கிலம் தேவையில்லை என்ற தலைப்பில் ஒரு பதிவு எழுதியுள்ளேன்.வருகை தாருங்கள் என அன்போடு அழைக்கிறேன்.
//சத்தியஜித்ரே இந்தியாவின் வறுமையைமட்டுமே தன் படங்களில் காண்பி்க்கவில்லையா? சத்யஜித்ரே செய்யலாம் நம் பாலா செய்யக்கூடாதா என்கிறார்கள். //
சத்யஜித் ரே படங்கள் எல்லாவற்றையும் பார்க்காமல் ஜல்லியடிப்பவர்களின் பொது குற்றச்சாட்டு இது.
ரேயின்... சாருலதா... பணக்காரக்குடும்பத்தின் நெருக்கடியை சொன்ன படம்.
குழந்தைகளுக்காக எத்தனைப்படம் எடுத்திருக்கிறார் தெரியுமா?
ஏன்.. நகைச்சுவை ,திரில்லர் என சகல களத்திலும் விளையாடி வெற்றி கண்ட சாதனையாளன்.
சத்யஜித்ரேயின் மேல் இக்குற்றச்சாட்டை வைப்பவர்கள் நுனிப்புல் மேய்பவர்கள். .
குட்டுங்க குட்டுங்க குட்டிக்கிட்டே இருங்க.
Post a Comment