Friday 15 April 2011

யாதுமாகி நின்றாய்!



கரம்பிடித்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை நீ.....

கோபமே கோபிக்குமளவு
வதைத்திருக்கிறேன் நானுனை.......
புன்னகையை தவழவிட்டு 
பாடம் சொன்னாய் நீயெனக்கு!

வலிகள்தவிர வேறெதுவும்
தந்ததில்லை நானுனக்கு........
மகிழ்ச்சி மலரை மட்டுமே
சமர்பித்தாய் நீயெனக்கு!

தவறுகள் பல புரிந்து 
தடுமாறி விழுந்தேன் பலசமயம்....
தந்தையாய் நீயிருந்து
தக்கவழி காட்டினாய்!



மௌனத்தை மொழியாக்கி
பேசாதிருந்தேன் பலகாலம்......
அன்னையாய் அரவணைத்து
அன்பை ஊட்டி ஆளாக்கினாய்!

குற்றங்களையும் குறைகளையும்
உன்னிடம் தேடியிருக்கிறேன் சண்டையிட.....
அன்பையும் நேசத்தையும் மட்டுமே
என்னில் நீ கண்டாய்!

களங்கமற்ற அன்பால் எனை
கட்டிப்போட்ட கணவனே!
கடல்கடந்து நீயும் கரைமேல் நானும்
கலங்கியே நிற்கிறோம் காதலுடன் ஓருயிராய்.........


12 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

என்னவென்று சொல்வது...

இது கடம்பவனத்தின்
வலி நிறைந்த ஒரு குயிலின்
சோக கீதம்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

படிக்கும் போதே நெஞ்சம் கனக்கிறது...

வாழத்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

திரட்டிகளில் இணைப்புக் கொடுங்கள்..

Praveenkumar said...

Yatharthamana ezhuthu nadaiyil Migavum arumaiyana kavithai..!

Praveenkumar said...

Kavithaiyai muditha vidham excellent... Kavithaiyai arumaiya sedhuki irukkenga... Vaazhthukkal.

கடம்பவன குயில் said...

@ கவிதை வீதி#சௌந்தர்
//என்னவென்று சொல்வது...

இது கடம்பவனத்தின்
வலி நிறைந்த ஒரு குயிலின்
சோக கீதம்..//
மிக்க நன்றி தோழரே!
இண்ட்லியிலும்,தமிழ் 10 இரண்டிலும் கொடுத்துள்ளேன். தமிழ்மணம் இனிதான் முயற்சிசெய்யவேண்டும்.

தங்கள் பாராட்டுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் மிக்க நன்றி.ஆலோசனைகளை தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்.

கடம்பவன குயில் said...
This comment has been removed by the author.
கடம்பவன குயில் said...

பிரவின்குமார் said...
//Kavithaiyai muditha vidham excellent... Kavithaiyai arumaiya sedhuki irukkenga... Vaazhthukkal.//


நன்றி சகோதரரே! தங்கள் வழிகாட்டுதல் இதில் முக்கிய பங்குவகிக்கிறது. நன்றியுடன் நன்றி நவிழ்கிறேன்.

Anonymous said...

யாதுமாகி நின்றேனா!!! பொய்யாக இருந்தாலும் கவிதை நடையில் சொல்லியிருப்பதால் எல்லோரும் மெய் என்று நம்பி விடுவார்கள்!!! பாராட்டுக்கள்!!! கடல் கடந்தும் என்றும் அன்புடன் கவிதையின் நாயகன்(என்று நினைத்து) --- ரியாதிலிருந்து ஹரி

ஆனந்தி.. said...

நம்ம ஊரா...ம்ம்...கலக்குங்க...

கடம்பவன குயில் said...

நன்றி ஆனந்தி. தங்கள் ஆதரவுக்கும், ஊக்கத்திற்கும் நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_12.html) சென்று பார்க்கவும். நன்றி !

Link

Related Posts Plugin for WordPress, Blogger...