Friday 29 April 2011

எதிரெதிரே இரு வீடுகள்..!!

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்
வருடத்திற்கொன்றெனவே
தவறாமல் ஈன்றிடுவாள் ஒருத்தி...........

வாரம், நாள் தவறாமல்
பிள்ளைவரம் வேண்டி
கோயில்குளம்
சுற்றிடுவாள் மற்றொருத்தி..........

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்!
குடிக்க கூழ் இல்லாமல்,
விளையாட சொப்புசாமானில்லாமல்...........
வயிறு ஒட்டி
வறுமை கொடிகட்டி
வாழ்ந்தது ஒரு வீட்டில்..........

அள்ளிப்புசித்திட ஆளில்லாமல்
ஆறிக்கிடக்கும் அறுசுவையுணவுடன்........
வறுக்கே வறுமைவந்து
வளமுடன் நிற்குது
மற்றொரு வீட்டில்..........

எதிரெதிரே இரு வீடுகள்
எக்குத்தப்பாய் ஏற்றத்தாழ்வுகள்!

எந்தையின் திருவுளம்
எவரொருவர் அறியவல்லார்???
* * * * * **

7 comments:

VELU.G said...

நல்லாயிருக்குங்க

வாழ்த்துக்கள்

சக்தி கல்வி மையம் said...

ஏழ்மையின் வலியை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்..

Praveenkumar said...

வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளையும் எடுத்துரைக்கும் அருமையான கவிதை வரிகள்...!

Praveenkumar said...

இதைப்படித்தவுடன் பாரதியாரின் ”வெள்ளை நிறத்தில் ஒரு பூனை” பாடல்வரிகள் நினைவுக்கு வருகிறது. அது போன்றதொரு வார்த்தை கோர்வைகள் இந்த பதிவின் வரிகளிலும்..!!! பாராட்டுகள்..!!

கடம்பவன குயில் said...

@ VELU.G

வாழ்த்துக்கு நன்றி சகோதரரே.

கடம்பவன குயில் said...

வேடந்தாங்கல்-கருன்

நன்றி சகோதரரே.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஏற்றதாழ்வுகள் கவி வடிவில்...

வாழ்த்துக்கள்...

Link

Related Posts Plugin for WordPress, Blogger...