Wednesday 5 October 2011

எங்கெங்கு காணினும் சக்தியடா!! (Devotional-Navarathri Spl-Shakthi) - 2

சென்ற பதிவின் தொடர்.......

இடைவேளை நீண்டதானாலும் என்னை மறக்காமல் என் பதிவை எட்டிப்பார்த்து கமெண்ட் போட்டு என்னை ஊக்குவித்த  அனைவருக்கும் நன்றிகள்.  என்னை தன் பதிவில் அறிமுகப்படுத்தி பெருமைப்படுத்திய சகோதர சகோதரிகளுக்கு நன்றி என்கிற 3 எழுத்துக்களில் சொல்லி முடித்துவிட முடியாது. ஆனாலும் நீங்கள் அனைவரும் எனக்கு கொடுக்கும் உற்சாகமே என்னை இன்னும் பதிவுலகில் வலம் வர வைத்திருக்கிறது.

சென்ற தொடரில் சக்தி வழிபாடுபற்றியும் எந்தெந்த தேசங்களில் எந்தெந்த பெயர்களில் வழிபாடு நடைபெற்றது என்பதையும் பார்த்தோம். இப்பொழுது நவராத்திரியில் வழிபடப்படும் அன்னையின் பிற வடிவங்களின்  பெயர்களையும் தாத்பர்யங்களையும் காண்போம்...

துர்க்கை

நவராத்ரியில் முதல் 3 நாட்கள் துர்க்கைக்கு உரியவையே. 

நல்ல செயல்களாக இருந்தாலும் தீய செயல்களாக இருந்தாலும் இரண்டுமே ஆத்ம சாதகனை உயர்நிலையை அடையவிடாமல் செய்யும் மாயைகளே. தீமையை விலக்குவதோடு நன்மையையும் விலக்கி அனைத்தையும் பிரம்மமாக உணர்வதே மனித வாழ்க்கையின் உன்னத இலட்சியமாகும்.



துர்க்கை மகிஷாசுரமர்தினியாகக் காட்சி தருகிறாள். சிங்கத்தின் மீது நின்றுகொண்டு அவள் அசுரனை பயங்கரமாகத் தாக்குகிறாள்.  கருமைநிறமுடைய அந்த அசுரன் ஆணவம், அறியாமை, மயக்கம், கோபம்ஆகிய தமோ குணத்தின் உருவமாக விளங்குகிறாள்.  பச்சை நிறம் கொண்ட துர்க்காதேவி சிவப்பு நிற  சேலை அணிந்திருக்கிறாள். அவள் எட்டு கைகளிலும் பலவித ஆயுதங்கள் ஏந்தி குணமயி என்று அழைக்கப்படுகிறாள்.  துர்க்கா தன் தொழிலுக்கு ஏற்ப ரஜோ குணம் கொண்ட உருவமாகத் திகழ்கிறாள்.

மகிஷாசுரமர்த்தினி

துர்க்கை ரஜோ குணத்தின் வடிவமாகத் திகழ்கிறாள்.  அரக்கன் தமோகுணத்தின் வடிவமாக விளங்குகிறாள். போரின் முடிவில் அரக்கனின் தீய குணங்கள் இயல்புகள் எல்லாம் அடியோடு அழிந்து அருளும் ,ஞானமும், கலையும், அருட்செயலும் , பேராற்றலும் தோன்றுகின்றன.  இந்த உண்மையை துர்க்கையின் இரண்டு பக்கங்களிலும் இரு்க்கும் சரஸ்வதி,  லட்சுமி வினாயகர் சுப்பிரமணியர் ஆகிய தேவதேவியரின் திருவுருவங்கள் விளக்குகின்றன.  பிறகு குணங்களை கடந்து விளங்கும் அதி உயர்ந்த நிலையாகிய பரம்பொருள் அடையப்பெருகிறது. இந்தக் கருத்தையே சிவபெருமானின் புறத்தோற்றமாகிய வெண்ணிறமும் அவருடைய உள்ளார்ந்த ஆழ்ந்த நிஷ்டையும் குறிப்பிடுகின்றன.

2.  காளி

காலம் என்ற தத்துவத்தின் சிறந்த விளக்கமாக காளி விளங்குகிறாள். காலத்தை தன்னுள் ஒடுக்கி வைத்திருக்கும் மாபெரும் சக்தியே காளி.
 திகம்பரி, முண்டமாலினி, கர்மருபிணி, பயங்கரி போன்ற பலநாமங்கள் காளியையே குறிக்கும்.

திகம்பரி

எல்லாத்திசைகளிலும் நீக்கமற நிறைந்திருப்பதனால் காளிக்குத் திகம்பரி என்ற பெயர் உண்டு.


முண்டமாலினி

காளிதேவியின் மற்றொரு திருநாமம் முண்டமாலினி. தலைகளால் கோர்க்கப்பட்ட மாலையை அணிந்தவள் என்பது அதற்குப் பொருள். குழந்தைப் பருவத்திலிருந்து வயோதிகபருவம் வரையிலுள்ள தலைகளைக் கொண்டு அந்த மாலை கட்டப்பட்டிருக்கும். மரணம் ஐந்திலும் வரலாம் ஐம்பதிலும் வரலாம் என்ற நிலையற்ற தன்மையை குறிப்பது இந்த மாலைகள்.  எல்லா உயிர்களிலும் ஆதிசக்தியிடமிருந்து தோன்றி மீண்டும் அவளிடமே ஐக்கியமாகின்றது. மரண்திலிருந்து யாரும் தப்பிவிட முடியாது. இந்த உலகம் அவளது விளையாட்டு மைதானம். கொடுத்த உயிரை மீண்டும் எப்பொழுதும எடுத்துக்கொள்வாள் என்பதை பல வயதுடைய தலைகள் குறிப்பிடுகின்றன.

கர்மருபிணி

செயல்கள் அனைத்திற்கும் சக்தியாக இருப்பவள் காளிதேவி. இதை அவள் அணிந்திருக்கும் துண்டிக்கப்பட்ட கைகளால் ஆகிய ஓட்டியாணம் விளக்குகிறது. உலகில் எங்கெல்லாம் பெரும் சக்தியின்  வெளிப்பாடு உள்ளதோ அங்கெல்லாம் தேவியின் வீரக் கரங்கள் எங்கும் எதிலும் நீண்டு பரந்திருக்கின்றன.

பயங்கரி

ஒரு கையில் வாளையும் மற்றொரு கையில் துண்டிக்கப்பட்ட ஒரு தலையையும் தேவி தாங்கி நிற்கிறாள்.வெட்டிய தலையும் இரத்தக்கறை படித்த வாளும் துன்பத்தின் அறிகுறியாகும் பேராசை, ஆணவம், சுயநலம், அநீதி, அதிகார வெறி எங்கெல்லாம் ஆட்சி புரிகின்றதோ அங்கெல்லாம் காளிதேவியின் கோரவாளும் ஆட்சி செய்யும்.  தர்மத்துக்கு மாறாக எது நடந்தாலும் அதனுடைய முடிவு அழிவாகத்தான் இருக்கும் என்பதை துண்டிக்கபட்ட தலை விளக்குகிறது.


காளிதேவி சுடுகாட்டில் ஊழிக்கூத்து ஆடுபவளாக, சிவனே அதற்கு ஆதாரமான மேடையாக தம் உடலையே கொடுப்பவராக சிவன் மேல் காளி ஆடும் நிலையில் திருஉருவம் அமைந்திருக்கிறது.

காளியை தள்ளி இருந்து பார்ப்பவர்களுக்கு , பக்தியால் அவளைஉணராதவர்களுக்கு அவள் கருமை நிறத்தவளாக, பயங்கரியாகவும் தோன்றுகிறாள். ஆனால் அவளுடைய குழந்தையாகிவிட்டவர்களுக்கு பால் நினைந்துட்டும் உலகத்தாயினும் மேலான தயாபரியாகவே அவள் திகழ்கிறாள்.


லட்சுமி தேவி எத்தனை விதங்களில் , எத்தனை பெயர்களில் நவராத்திரியில் வழிபடப்படுகிறாள் என்பதையும் சரஸ்வதியின் வழிபாட்டையும் அடுத்த தொடரில் காண்போம் , ஆதிசக்தியின் சித்தமிருந்தால்....





அனைவருக்கும் சரஸ்வதி பூஜா வாழ்த்துக்கள்..........

முந்தைய பதிவைப்பார்க்க இங்கே கிளிக் செய்யவும். 
எங்கெங்கு காணினும் சக்தியடா.!! பாகம் - 1


30 comments:

சி.பி.செந்தில்குமார் said...

எங்கெங்கு காணினும் இன்று ஆன்மீகப்பதிவு... ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

சி.பி.செந்தில்குமார் said...

ஆன்மீகப்பதிவில் கிண்டலாய் கமெண்ட்டினால் உம்மாச்சி கண்ணைக்குத்தும் என்பதால் அப்பீட்டு

கோகுல் said...

லட்சுமி தேவி எத்தனை விதங்களில் , எத்தனை பெயர்களில் நவராத்திரியில் வழிபடப்படுகிறாள் என்பதையும் சரஸ்வதியின் வழிபாட்டையும் அடுத்த தொடரில் காண்போம் , ஆதிசக்தியின் சித்தமிருந்தால்....//

நிச்சயம் இருக்கும்.
வாழ்த்துக்கள்!

மகேந்திரன் said...

அன்பு நண்பருக்கு சரஸ்வதி பூஜா வாழ்த்துக்கள்.
சக்தியின் மறு உருக்களை அழகாய் விளக்கி
கூறி இருக்கிறீர்கள். உங்களின் இந்த பதிவின் மூலம்
நிறைய தெரிந்துகொண்டேன்.
மிக்க நன்றி.

நிரூபன் said...

நல்லதொர் பதிவு, சக்தியின் பெருமைகளை அருமையாகச் சொல்லுகின்ற பதிவு.

நிரூபன் said...

சக்தியின் பெருமை தனை அவள் எடுக்கின்ற ஒவ்வோர் உருவின் அடிப்படையிலும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.

கடம்பவன குயில் said...

சி.பி.செந்தில்குமார் said...

//எங்கெங்கு காணினும் இன்று ஆன்மீகப்பதிவு... ஆயுத பூஜை வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் அணுவளவும் சம்மந்தமில்லைன்னு கேள்விப்பட்டேன்... ஆயுத பூஜை வாழ்த்துக்கள் எல்லாம் சொல்றீங்க...எனிஹொ நன்றி

கடம்பவன குயில் said...

@ கோகுல்

நன்றி நண்பரே..

கடம்பவன குயில் said...

@ மகேந்திரன்

நன்றி தங்கள் வாழ்த்துக்களுக்கு . தங்களைவிட சிறப்பாய் நான் ஒன்றுமே எழுதவில்லை..

கடம்பவன குயில் said...

நிரூபன் said...

//சக்தியின் பெருமை தனை அவள் எடுக்கின்ற ஒவ்வோர் உருவின் அடிப்படையிலும் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க.//

மிக்க நன்றி. அனைத்திற்கும்......

Unknown said...

"சரஸ்வதியின் வழிபாட்டையும் அடுத்த தொடரில் காண்போம் , ஆதிசக்தியின் சித்தமிருந்தால்...."

தொடரில் காண்போம் என்றே குறிப்பிடலாமே! ஆதிசக்தியின் சித்தமிருப்பதால்தானே இதை எழுதத்துவங்கி இருக்கிறீர்கள்

Yaathoramani.blogspot.com said...

அவள் கருமை நிறத்தவளாக, பயங்கரியாகவும் தோன்றுகிறாள். ஆனால் அவளுடைய குழந்தையாகிவிட்டவர்களுக்கு பால் நினைந்துட்டும் உலகத்தாயினும் மேலான தயாபரியாகவே அவள் திகழ்கிறாள் //.


படங்களுடன் பதிவும் மிக மிக அருமை
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

த.ம 7

rajamelaiyur said...

Happy ayudha pooja

மாய உலகம் said...

அழகிய ஆன்மீக பதிவு அருமை... ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

அம்பாளடியாள் said...

பொருத்தமான நேரத்தில் இடப்பட்ட சிறப்பான ஆக்கம் வாழ்த்துக்கள் .
மிக்க நன்றி பகிர்வுக்க .........

அம்பாளடியாள் said...

என் தளத்தில் இன்று ஒரு பக்திப் படல்வரிகளுடன் நானும் காத்திருக்கின்றேன் வாருங்கள் சகோதரி
வந்து உங்கள் கருத்தினையும் தாருங்கள் .

சந்திர வம்சம் said...

மிக அருமையான பதிவு.தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள்.

Unknown said...

அருமை

Anonymous said...

உங்களின் இரு பதிவுகளின் மூலம்
நிறைய தெரிந்துகொண்டேன்... வாழ்த்துக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

அருமையான அர்த்தமுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ananthu said...

பக்தி பரவசம் தரும் பதிவு ...

தேன் நிலா said...

ஓ.. நீங்கள் ஆன்மீகப் பதிவரா? வாழ்த்துக்கள் அன்பரே.. உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது பக்தி இல்லாதவர்களுக்கும் கூட பக்தி வந்துவிடும்.. கடவுள் நம்பிக்கை வரவழைக்கும் விதம் உங்களுடைய பதிவுகள் ஒவ்வொன்றும் இருக்கிறது.. வாழ்த்துக்கள் நண்பரே..!!

தேன் நிலா said...

இனி ஒவ்வொரு நாளும் உங்கள் பதிவுகளை எதிர்நோக்கிக் காத்திருப்பேன். நிச்சயம் நேரமிருக்கும்போது உங்களைப் பதிவுகளை தவறவிடமாட்டேன்.. நன்றி நண்பரே..!!

சிவகுமாரன் said...

சக்தியின் பல்வேறு வடிவங்களையும் , தத்துவங்களையும் படித்து மகிழ்ந்தேன்.
நன்றி.
அன்னை மீனாட்சிக்கு நான் சூட்டிய பாமாலை படித்தீர்களா?
www.arutkavi.blogspot.com

மாய உலகம் said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... மகிழ்ச்சியும், வளமும் பெருகட்டும்...

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான ஆக்கம் பாராட்டுக்கள்..

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

பதிவுமிக அழகு .
வாழ்த்துக்கள்

Anonymous said...

11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...

Anonymous said...

புத்தாண்டு வாழ்த்துகள்...

Link

Related Posts Plugin for WordPress, Blogger...