என் வீதியில் உலாவரும்
எல்லா வாகனங்களையும்
கேட்கவில்லை இடம்.
என் மன்னவனின்
மன வாகனத்தில்
கடுகளவு
எனக்கிடமிருந்தால்
போதும்!
கல்யாணி ராகத்தைக்
காணாமலேயே
முகாரியிலேயே என்பாடல்
முடிந்து விடுமா???
* * * * *
ஓ...பரிதாபத்துக்குரியவளே!!
அடுப்படியில் அழுக்கோடு
அனுதினமும் ஆடிஓயும்
அதிர்ஷ்டமில்லா நீ!!
அடுப்பில் உணவு சமைத்தபோது
அடுப்புக்கே உணவானதேன்??
அரக்ககுண மாமியாரின்
அளவில்லா கொடுமையினாலோ??
* * * * * * *
இருண்ட இரவுகளில்
துயர மனதுடன்
தூங்காமல்,
விழி ஒளியையே
விளக்காகக் கொண்டு
நானெழுதும் இந்தக் கவிதைகளை
பகலின் வெளிச்சத்தில்
படித்துப்பார்ப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது!!
* * * * * *
Tweet | |||||
48 comments:
//
கல்யாணி ராகத்தைக்
காணாமலேயே
முகாரியிலேயே என்பாடல்
முடிந்து விடுமா???///
சூப்பர் பாஸ்!!
தமிழ்மணம் வரவில்லை..அப்புறமா வாறன்!
@ மைந்தன் சிவா said
கல்யாணி ராகத்தைக்
காணாமலேயே
முகாரியிலேயே என்பாடல்
முடிந்து விடுமா???///
சூப்பர் பாஸ்!!
நன்றி தல. எனக்கும் தமிழ்மணத்தில் இணைக்கவே முடியல. ஏன்னு தெரியல.
திறமையான எழுத்து ....அருமையான ஹைக்கூ ....
//////
கல்யாணி ராகத்தைக்
காணாமலேயே
முகாரியிலேயே என்பாடல்
முடிந்து விடுமா???//////
மங்களம் இசைக்க கூடவே மலையும் வரும் கலங்காதீர்...
/////
நானெழுதும் இந்தக் கவிதைகளை
பகலின் வெளிச்சத்தில்
படித்துப்பார்ப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது!!/////////
வலிகளாலும், காயங்களாலும்
மட்டும் ஒரு நல்ல கவிதையை தரமுடியும்...
இதை நானே உணர்ந்திருக்கிறேன்..
படித்தவர் எழுதயவரின் வலியை கவிதையில் உணர்ந்தால்
அங்கே கவிதை உயிர்ப்பெறும்...
அழகிய கவிதைகள்...
ஒரே டைட்டிலில் இரண்டு கவிதைகள் சபாஷ். அண்ணி
தமிழ்மணம் இப்போதெல்லாம் பதிவு போட்டு அரை மணி நேரம் கழித்தே இணைகிறது..
>பகலின் வெளிச்சத்தில்
படித்துப்பார்ப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது!!
ஹா ஹா உங்க எல்லா கவிதைகளுமே அப்டித்தான் அண்ணி, அண்ணனுக்கு மட்டும் தான் புரியும்.. ஹா ஹா
ஒரு பெண்ணின் சாதாரண ஏக்கத்தை
அழகுபட வடித்திருக்கிறீர்கள்.
அருமை.
விளங்க முடியா சோகத்தை விளக்கும் கவிதை. அருமை.
அருமை ஐய்யா கவிதைகள்..
தமிழ் மணம் வராவிட்டாளும்..
காட்டான் வந்துவிட்டான்.
காட்டான் குழ போட்டான்..
இருண்ட இரவுகளில்
துயர மனத்துடன்
தூங்காமல் விழி ஒளியையே
விளக்காகக் கொண்டு
நீங்கள் எழுதும் வீீரமிக்க கவிதைகளை
பகலில் வெளிச்சத்தில்
படித்தும் பார்க்கும் எங்களால்
எளிதாக புரிந்து கொள்ள முடிகிறதே
ஒருவேளை எங்களுக்குள்ளும்
உங்களைப்போல் ஈரமிருக்கிறது என்பதாலா ?
நான்கு கவிதைகளும் அருமை
நீளம் கருதி ஒன்றுக்கு மட்டுமே
பின்னூட்டமிட்டிருக்கிறேன்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்
மனதை வருடும் கவிதை..
குயிலின் மறுக்கப்பட்ட கீதங்கள்!! மலரின்உணரப்படாத மௌனங்கள்!!"
சோகங்களை உணர்த்திய பகிர்வு.
பிடித்தமானவரின் உள்ளத்தில் இடங் கொடுக்கப்படாமலும், மாமியாரின் கொடுமைகளால் மனதில் வடுக்களோடு நகரும் ஒரு பெண்ணின் உணர்வுகளையும் உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கின்றது.
மனதைக் கனக்கச் செய்யும் வரிகள் சகோ.
பிடித்தமானவரின் உள்ளத்தில் இடங் கொடுக்கப்படாமலும், மாமியாரின் கொடுமைகளால் மனதில் வடுக்களோடு நகரும் ஒரு பெண்ணின் உணர்வுகளையும் உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கின்றது.
மனதைக் கனக்கச் செய்யும் வரிகள் சகோ.
#koodal bala# said
//திறமையான எழுத்து ....அருமையான ஹைக்கூ ....//
மிக்க நன்றி சார்.
//வலிகளாலும், காயங்களாலும்
மட்டும் ஒரு நல்ல கவிதையை தரமுடியும்...
இதை நானே உணர்ந்திருக்கிறேன்..
படித்தவர் எழுதயவரின் வலியை கவிதையில் உணர்ந்தால்
அங்கே கவிதை உயிர்ப்பெறும்...
அழகிய கவிதைகள்...//
மெல்லிதயம் கொண்டோருக்கு மட்டுமே அடுத்தவரின் வலியும் வேதனையும் புரியும். நன்றிகள் சகோ.
சி.பி செந்தில்குமார் said
//ஒரே டைட்டிலில் இரண்டு கவிதைகள் சபாஷ். அண்ணி//
டைட்டில் விஷயத்தில் என்னோட குரு நீங்கதானே கொழுந்தனாரே.
சி.பி.செந்தில்குமார் said
//ஹா ஹா உங்க எல்லா கவிதைகளுமே அப்டித்தான் அண்ணி, அண்ணனுக்கு மட்டும் தான் புரியும்.. ஹா ஹா//
இதில் எந்த உள்குத்தும்(அர்த்தமும்) இல்லையே????. (புரியாத புதிர் எனது கவிதை???)
மகேந்திரன் said
//ஒரு பெண்ணின் சாதாரண ஏக்கத்தை
அழகுபட வடித்திருக்கிறீர்கள்.
அருமை.//
நன்றி சகோ.
தமிழ் உதயம் said
//விளங்க முடியா சோகத்தை விளக்கும் கவிதை. அருமை.//
நன்றி சகோ.
காட்டான் said
//அருமை ஐய்யா கவிதைகள்..
தமிழ் மணம் வராவிட்டாளும்..
காட்டான் வந்துவிட்டான்.
காட்டான் குழ போட்டான்..//
வருக..வருக..காட்டான் அவர்களே. தங்கள் வருகையால் கடம்பவனம் பொலிவுபெறுகிறது.
#Ramani #Said
//நான்கு கவிதைகளும் அருமை
நீளம் கருதி ஒன்றுக்கு மட்டுமே
பின்னூட்டமிட்டிருக்கிறேன்
தரமான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்//
வாருங்கள் சார். தங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் ஊக்கத்தால்தான் சாதாரணமான என்னாலும் ஏதோ கிறுக்க முடிகிறது. தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
#வேடந்தாங்கல் கருண்# said
//மனதை வருடும் கவிதை..//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.
#இராஜராஜேஸ்வரி# said
//குயிலின் மறுக்கப்பட்ட கீதங்கள்!! மலரின்உணரப்படாத மௌனங்கள்!!"
சோகங்களை உணர்த்திய பகிர்வு.//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அம்மா.
அருமையான கவிதை...காதலையும் சோகத்தையும் பரிமாறிக்கொண்டவிதம் பாராட்டத் தக்கது. வாழ்த்துக்கள்......
#நிருபன்# said
//பிடித்தமானவரின் உள்ளத்தில் இடங் கொடுக்கப்படாமலும், மாமியாரின் கொடுமைகளால் மனதில் வடுக்களோடு நகரும் ஒரு பெண்ணின் உணர்வுகளையும் உங்கள் கவிதை தாங்கி வந்திருக்கின்றது.
மனதைக் கனக்கச் செய்யும் வரிகள் சகோ.//
நன்றி சகோ.
#அம்பாளடியாள்# said
//அருமையான கவிதை...காதலையும் சோகத்தையும் பரிமாறிக்கொண்டவிதம் பாராட்டத் தக்கது. வாழ்த்துக்கள்......//
தங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
//
என் வீதியில் உலாவரும்
எல்லா வாகனங்களையும்
கேட்கவில்லை இடம்.
என் மன்னவனின்
மன வாகனத்தில்
கடுகளவு
எனக்கிடமிருந்தால்
போதும்!
//
அருமையான வரிகள்
அழகான கவிதை
என்று என் வலையில்
டி.வியாடா நடத்துறிங்க
தங்களது கவிதையின் தலைப்பே ஓர் சிறந்த கவிதையாக உள்ளது.
முதல் கவிதையில் சோகம் நிறைந்த ஏக்கத்தை சொல்லியிருப்பது அருமையோ அருமை.
இரண்டாவது கவிதையில் பரிதாபத்தின் கொடுமையை இயல்பா சொல்லியிருக்கீங்க.. சூப்பர்.
கவி வரிகள் அருமை.
மூன்றாவது கவிதையில் பகலின் வெளிச்சத்தில் படிப்பவர்களுக்கு புரியாது. அட... அட... பின்றீங்க... போங்க.. தொடர்ந்து கலக்குங்க. சூப்பர்.
@ "என் ராஜபாட்டை”- ராஜா”
தங்கள் கருத்துகளுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி சார்.
@ தமிழ்வாசி-Prakash
தங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி சகோ.
@ பிரவின்குமார்
ஒவ்வொரு கவிதையையும் ஆழ்ந்து ரசித்து கரு்த்துரை வழங்கியது மகிழ்வைத் தருகிறது. மிக்க நன்றி மாஸ்டர்
excellent poem....
இருண்ட இரவுகளில்
துயர மனதுடன்
தூங்காமல்,
விழி ஒளியையே
விளக்காகக் கொண்டு
நானெழுதும் இந்தக் கவிதைகளை
பகலின் வெளிச்சத்தில்
படித்துப்பார்ப்பவர்களால்
புரிந்துகொள்ள முடியாது!!
supper....
congratulation"
அருமையான கவிதைகள், சோகமான வரிகளோடு. நல்ல நடை.
அருமையான பகிர்வு. இன்னமும் அடுப்புகள் மனிதகறி சமைக்கின்றனவா?
கவிதை அற்ப்புதமாக உள்ளது.
சிசிலியன் கேர்ள் என்ற உலக சினிமாவை பெண் பதிவர் எழுதினால் நன்றாக இருக்கும் என விரும்பினேன்.
நண்பர் சி.பி உங்களை பரிந்துரைத்தார்.
உங்கள் நடையில் அப்படம் மிகவும் சிறப்பாக பரிமளிக்கும் என்ற நம்பிக்கையோடு வேண்டுகோள் விடுக்கிறேன்.
அத்தனை கவிதைகளும் அருமை
...வாழ்த்துக்கள்
@ ரெவெரி
//அத்தனை கவிதைகளும் அருமை
...வாழ்த்துக்கள்//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.
அனைத்து வரிகளும் உள்ளில் ஊர்ந்து உணர்த்திச்செல்கின்றன...
Post a Comment