Wednesday, 8 June 2011

பிரியமானத் தோழியே...!

நடனத்தில் வல்ல நகைமுக மாது
நளினத்தின் அழகோ மன்மதன் தூது.!
இடையின் அழகோ சிறு கொடியழகு
இதைவிட அழகு உலகத்தில் ஏது..!!??
சின்னஞ்சிறு சங்கதனில்
கருந்திராட்சை கோர்த்தாற்போல்
மின்னி மின்னி எழில் காட்டும்
கண்கள் வான தாரகையோ..!??

சித்திரையின் நிலவதுவோ
மின்னிடும் வதனமோ..??
பிரியமானவரை பிரிப்பதுதான்
பரமனின் விளையாட்டோ..?
நாமிருவர்தான் இதற்கு ஆதாரமோ..!?....
வான வெளியிலே நிலவது ஆடையிலே
நம்மிருவர் மனம் மட்டும்
சோகத்தில் மூழ்குவதேன்..?
உயிர்பிரியும் நிலையிலும்
உறவு பிரிவதிலே கொடுமையதிகம்
அதை அனுபவத்தில் உணர்ந்தபின்னும்
இன்னும் ஏனோ தயக்கம்..?
பிரிவைத் தவிர வழியில்லா நிலையில்
கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..??...
* * * * * * *

40 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

//////
பிரிவைத் தவிர வழியில்லா நிலையில்
கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..??...//////

இந்த கண்ணீர்தான் நட்பின் இலக்கணம் சொல்லும்...
நட்பின் ஆழமும் சொல்லும்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

////////
பிரியமானவரை பிரிப்பதுதான்
பரமனின் விளையாட்டோ..?//////

இதையே கொள்கையாய் சிலபேர் என்ன செய்ய..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகான மற்றும் நளினம் கொ்ணட கவிதை...
வாழ்த்துக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நண்பர் இளையராஜாவின் ஓவியங்கள் கவிதைக்கும் இன்னும் வலுசேர்க்கிறது...

சக்தி கல்வி மையம் said...

பதிவுலகில் மரபு கவிதை அபூர்வம்..

சக்தி கல்வி மையம் said...

கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..?

சக்தி கல்வி மையம் said...

கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..?// அருமையான வரிகள் சகோ..

கடம்பவன குயில் said...

@கவிதைவீதி சௌந்தர்

ஆம் நண்பரே. நட்பின் ஆழத்தை பிரிவின்போது வரும் கண்ணீரே உணர்த்தும்.

கடம்பவன குயில் said...

கவிதைவீதி ரசித்த கவிதை. நன்றி நண்பரே

கடம்பவன குயில் said...

வேடந்தாங்கல் கருண்

மிக்க நன்றி சகோதரரே.

இராஜராஜேஸ்வரி said...

பிரியமானவரை பிரிப்பதுதான்
பரமனின் விளையாட்டோ..?
நாமிருவர்தான் இதற்கு ஆதாரமோ..!//
கடம்பவனத்தில் பூத்துக் குலுங்கிய
அருமையான கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள்.

தமிழ் உதயம் said...

கவிதையும், ஓவியமும் கொள்ளை அற்புதம்.

கடம்பவன குயில் said...

@ இராஜராஜேஸ்வரி


//கடம்பவனத்தில் பூத்துக் குலுங்கிய
அருமையான கவிதை வரிகளுக்குப் பாராட்டுக்கள்.//

நன்றி சகோதரி. தங்கள் வருகையால் மகிழ்ந்தேன்.

கடம்பவன குயில் said...

@ தமிழ்உதயம்

//கவிதையும், ஓவியமும் கொள்ளை அற்புதம்.//

நன்றி சகோ

சி.பி.செந்தில்குமார் said...

?>>>பிரிவைத் தவிர வழியில்லா நிலையில்
கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..??...

அண்ணியின் ஃபினிஷிங்க் டச் செம

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணனின் உதவி இல்லாமல் அண்ணீயே சொந்தமாக எழுதிய கவிதை என்பதை கண்டு பிடித்து விட்டேன் ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said...

ஒரு ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கூட இல்லை.. அட போங்கப்பா. ஹி ஹி (ஏதாவது குறை சொல்லலாம்னு பார்த்தா அண்ணி தப்பிச்சிடுச்சே நற நற .. )

சாகம்பரி said...

பெண்களின் சாபமாக , இதுபோல எத்தனை தோழிகளை இழந்துள்ளோம். திருமணம், வேலை, உள்ளுரில் இருந்தால்கூட நமக்கென்று ஒதுக்க நேரமின்மை எத்தனை காரணங்கள். கை நழுவிப்போன நட்பிற்கு கவிதாஞ்சலி நன்று.

கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

//அண்ணியின் ஃபினிஷிங்க் டச் செம//

அப்ப ஆரம்பமும் உள்ளடக்கமும் ஒன்றுமே இல்லையா????

நாங்க கண்டுபிடிப்போமுல்ல குறை.

கடம்பவன குயில் said...

@ சி.பி்.செந்தில்குமார்

//அண்ணனின் உதவி இல்லாமல் அண்ணீயே சொந்தமாக எழுதிய கவிதை என்பதை கண்டு பிடித்து விட்டேன் ஹி ஹி//

அண்ணனுக்கு கவிதையோட ஸ்பெல்லிங் கூட தெரியாது. பிடிக்கவும் பிடிக்காது. நிஜமாகத்தான் சொல்றேங்க.

கடம்பவன குயில் said...

@ சி.பி்.செந்தில்குமார்

//அண்ணனின் உதவி இல்லாமல் அண்ணீயே சொந்தமாக எழுதிய கவிதை என்பதை கண்டு பிடித்து விட்டேன் ஹி ஹி//

அண்ணனுக்கு கவிதையோட ஸ்பெல்லிங் கூட தெரியாது. பிடிக்கவும் பிடிக்காது. நிஜமாகத்தான் சொல்றேங்க.

கடம்பவன குயில் said...

@ சாகம்பரி

//பெண்களின் சாபமாக , இதுபோல எத்தனை தோழிகளை இழந்துள்ளோம். திருமணம், வேலை, உள்ளுரில் இருந்தால்கூட நமக்கென்று ஒதுக்க நேரமின்மை எத்தனை காரணங்கள். கை நழுவிப்போன நட்பிற்கு கவிதாஞ்சலி நன்று.//

ஆனால் ஆண்கள் மட்டும் கடைசிவரை நட்பின் தொடர்பில். எந்த ஊரில் இருந்தாலும் கெட்டுகெதர் மற்றும் நண்பர்களின் வீட்டு விசேசத்துக்கு தான் மட்டும் ஓடிபோய் அட்டெண்ட் பண்ணிட்டு வந்துடுவார்கள். நாம மட்டும் நம்ம நட்புகளை மனசுக்குள்அடைத்துவைக்கவேண்டும்.திருமணத்திற்குப்பின் கைநழுவிப்போன நட்புக்கள் எத்தனை எத்தனையோ?? ஹீம்... பெருமுச்சுவிடத்தான் முடிகிறது.

arasan said...

மிகவும் ரசித்த வரிகள் ...

ஷர்புதீன் said...

அந்த ஓவியங்கள் அழகு!

கடம்பவன குயில் said...

@ அரசன்

//மிகவும் ரசித்த வரிகள் ...//

கடைசிவரை எதுனே சொல்லலியே.....

கடம்பவன குயில் said...

@ ஷர்புதின்


//அந்த ஓவியங்கள் அழகு!//


அப்ப கவிதை????????

குணசேகரன்... said...

உங்க அனுபவமா இந்த கவிதை..?!சூப்பர்
ரொம்ப முக்கியமான நியூஸ்.நன்றிங்க.. நிறைய தடவை நான் உங்களுக்கு கமெண்ட்ஸ் எழுதியிருக்கிறேன்.
என்னோட பதிவையும் பத்தி கொஞ்சம் கமெண்ட்ஸ் சொல்லுங்க.

சி.பி.செந்தில்குமார் said...

>>கடம்பவன குயில் said...

அண்ணனுக்கு கவிதையோட ஸ்பெல்லிங் கூட தெரியாது. பிடிக்கவும் பிடிக்காது. நிஜமாகத்தான் சொல்றேங்க.

ஹா ஹா இதை நம்ப முடியாது,கவிதை பிடிக்காமலா கவிதாயினியை பிடித்தார்? ஹா ஹா

பை த பை அணி உங்க தளத்துல ஓட்டுப்பட்டையை இடம் மாத்திப்பாருங்க.. கமெண்ட்ஸ் வந்த அளவு ஓட்டு இல்லை, ஏதோ ப்ளேஸ்மெண்ட் பிராப்ளம்

கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

//பை த பை அணி உங்க தளத்துல ஓட்டுப்பட்டையை இடம் மாத்திப்பாருங்க.. கமெண்ட்ஸ் வந்த அளவு ஓட்டு இல்லை, ஏதோ ப்ளேஸ்மெண்ட் பிராப்ளம்//

கமெண்ட்ஸ் மட்டும் போட்டுட்டு ஓட்டுப்போடாமல் நிறையபேர் எஸ்கேப் ஆறாங்களோ என்னவோ?
நண்பர் பிரவீண்தான் எனக்கு அந்த வேலையை செய்து தருவார். எனக்கு செட்டிங்ஸ் செய்யத் தெரியாது. சொல்றேன். ஆனால் ஆன்லைனில் நான் வந்தாலே கணிணியை குளோஸ்பண்ணிட்டு ஓடுறஅளவு வேலைவாங்கி மிரட்டி வச்சுருக்கேன். சரிபண்றேன்.
நன்றி கொழுந்தனாரே.

எல் கே said...

நல்ல வரிகள். தொடர்ந்து எழுதுங்கள்

vidivelli said...

"உறவு பிரிவதிலே கொடுமையதிகம்
அதை அனுபவத்தில் உணர்ந்தபின்னும்
இன்னும் ஏனோ தயக்கம்..?
பிரிவைத் தவிர வழியில்லா நிலையில்
கண்ணீர்தான் நட்புக்குப் பரிசோ..??..."


கவிதை சும்மா இல்லை ரணமாய்
அருமை............



!!!!நம்ம பக்கமும் காத்திருக்கிறேன்!

அன்புடன் நான் said...

பகிர்வு கவிதை நல்லாயிருக்குங்க..... படம் மிக நேர்த்தி.

உலக சினிமா ரசிகன் said...

எழுத்தாளர் சுஜாதா கதையை திருடி வெள்ளைக்காரர்கள் ஹாலிவுட் படமாக்கியிருக்கிறார்கள்.முழு விபரம் அறிய எனது வலைப்பக்கம் வாருங்கள்.

மாலதி said...

//சித்திரையின் நிலவதுவோ
மின்னிடும் வதனமோ..??
பிரியமானவரை பிரிப்பதுதான்
பரமனின் விளையாட்டோ..?
நாமிருவர்தான் இதற்கு ஆதாரமோ..!?....//இந்த கண்ணீர்தான் நட்பின் இலக்கணம் சொல்லும்...
நட்பின் ஆழமும் சொல்லும்...

அம்பாளடியாள் said...

பதிவர்களுக்கு இன்று எனது வலைத்தளத்தில் ஒரு விருந்து வைத்துள்ளேன் சென்று அனுபவியுங்கள்
வாழ்த்துக்கள்.........

அம்பாளடியாள் said...

நடனத்தில் வல்ல நகைமுக மாது
நளினத்தின் அழகோ மன்மதன் தூது.!
இடையின் அழகோ சிறு கொடியழகு
இதைவிட அழகு உலகத்தில் ஏது..!!??

நல்ல சந்தங்களுடன் அமைந்த
அருமையான கவிதை சகோதரி
வாழ்த்துக்கள்!.............

R.Gopi said...

ஆஹா....அற்புதம்...

நன்கு அனுபவித்து எழுதப்பட்ட ஆழமான வரிகள்... கூடவே நேர்த்தியான் படங்கள் என் பதிவு நிஜமாகவே களைகட்டி விட்டது...

வாழ்த்துகள்....

கடம்பவன குயில் said...

R.Gopi

வாங்க சார். நலமாயிருக்கிறீர்களா? என்ன இவ்வளவு நாட்களாக உங்களை காணவில்லை. விடுமுறையில் இந்தியா வந்தீர்களா? தங்கள் நண்பர்கள் அனைவரும் நலமா?

சௌந்தர் said...

ஆழமான வரிகள் ரொம்ப அனுபவமோ...???

சி.பி.செந்தில்குமார் said...

அண்ணி.. சும்மா அண்ணன் கூடவே கடலை போட்டுட்டு இருந்தா எப்படி? பதிவு போடலை? ஹா ஹா

Link

Related Posts Plugin for WordPress, Blogger...