Wednesday, 1 June 2011

நிலவும் வானும், கதிரும் நானும்..!

இரவு வானம்

வான வீதியில்
மேகங்களை குடையாக்கி
நட்சத்திர குழந்தைகளு்டன்
நிலவுப் பெண்ணவள்
தன் காதலன் கதிரவனைத்
தேடித் திரிகிறாள்!!

* * * * *

நீலவான நீச்சல் தடாகத்தில்
தன் நட்சத்திர தோழிகளுடன்
நிலா இளவரசி
இரவில்
நீச்சல் பயில்கிறாள்...
* * * * *  


செங்கதிரவன் வரவு
உடல் எங்கும் நீலநிற உடையில்
நளினமாய் சிரித்திடும் பெண்ணவள்
தன் காதலனை கண்டதனால்
சிவந்த தன் முகத்தை
சிறிதுசிறிதாய் நாணத்தால்
உயர்த்துதல் போலே........
நீல சேலை கட்டிய மலைமகளின்
மெல்லிய உடலிலிருந்து
சிறிதுசிறிதெனவே தன்
முகத்தை உயர்த்தினான்
சிவந்த செங்கதிரோன்...!!
* * * * * * *

17 comments:

சி.பி.செந்தில்குமார் said...

நிலாக்காயும் நேரம் சரணம்...

சி.பி.செந்தில்குமார் said...

இன்னைக்கு ஒரே வானம், நிலா,சூரியன்னு பாட்டா இருக்கு.. படுத்துக்கிட்டே எழுதுன கவிதை போல.. ஹ ஹா ஹா

Yaathoramani.blogspot.com said...

படங்களும் அதற்கான கவிதைகளும்
மிக மிக அருமை
எதற்காக எது என பிரித்தரிய முடியா தபடி
இரண்டும் மிக அழகாக இயைந்து உள்ளன
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

Praveenkumar said...

//இரவு வானம்// தலைப்புக்கேற்ற கவிதையுடன் உயிரூட்டும் புகைப்படத்தை இணைத்திருப்பது தங்களது கவிதை நடையில் நல்ல மெருகேற்றம்..!! தொடர்ந்த நிறைய எழிதிட வாழ்த்துகள்...!!

Praveenkumar said...

செங்கதிரவனைப்பற்றி எழுதியிருக்கும் கவிதையும் தங்களது யதார்த்த நடையை வெளிப்படுத்தும் விதமாக அருமையாக உள்ளது..!!

ஷர்புதீன் said...

நிறைய எழுதுங்க., வாசிக்கிற பழக்க இருப்பவர்களால் அது முடியும்

கடம்பவன குயில் said...

@ சிபி
//இன்னைக்கு ஒரே வானம், நிலா,சூரியன்னு பாட்டா இருக்கு.. படுத்துக்கிட்டே எழுதுன கவிதை போல.. ஹ ஹா ஹா//

கரைக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.. நம்ம சகோதரர்கள் எல்லோரும் அதிரடி அரசியல் பதிவில் இறங்கி சூடா இருக்கிறார்கள். ஜஸ்ட் அவங்க கொஞ்சம் கூல் ஆகட்டும்னுதான் நிலா வானம் எல்லோரையும் கூப்பிடுகிறேன்.

கடம்பவன குயில் said...

@ சிபி
//இன்னைக்கு ஒரே வானம், நிலா,சூரியன்னு பாட்டா இருக்கு.. படுத்துக்கிட்டே எழுதுன கவிதை போல.. ஹ ஹா ஹா//

கரைக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.. நம்ம சகோதரர்கள் எல்லோரும் அதிரடி அரசியல் பதிவில் இறங்கி சூடா இருக்கிறார்கள். ஜஸ்ட் அவங்க கொஞ்சம் கூல் ஆகட்டும்னுதான் நிலா வானம் எல்லோரையும் கூப்பிடுகிறேன்.

கடம்பவன குயில் said...

@ சிபி
//இன்னைக்கு ஒரே வானம், நிலா,சூரியன்னு பாட்டா இருக்கு.. படுத்துக்கிட்டே எழுதுன கவிதை போல.. ஹ ஹா ஹா//

கரைக்ட்டா கண்டுபிடிச்சுட்டீங்களே.. நம்ம சகோதரர்கள் எல்லோரும் அதிரடி அரசியல் பதிவில் இறங்கி சூடா இருக்கிறார்கள். ஜஸ்ட் அவங்க கொஞ்சம் கூல் ஆகட்டும்னுதான் நிலா வானம் எல்லோரையும் கூப்பிடுகிறேன்.

கடம்பவன குயில் said...

@ Ramani

//படங்களும் அதற்கான கவிதைகளும்
மிக மிக அருமை
எதற்காக எது என பிரித்தரிய முடியா தபடி
இரண்டும் மிக அழகாக இயைந்து உள்ளன
நல்ல படைப்பு
தொடர வாழ்த்துக்கள்//

தங்கள் பாராட்டுக்கும் ஊக்குவிப்புக்கும் மிக்க நன்றி சார்.

கடம்பவன குயில் said...

@ பிரவீன்குமார்

//இரவு வானம்// தலைப்புக்கேற்ற கவிதையுடன் உயிரூட்டும் புகைப்படத்தை இணைத்திருப்பது தங்களது கவிதை நடையில் நல்ல மெருகேற்றம்..!! தொடர்ந்த நிறைய எழிதிட வாழ்த்துகள்...!!//

நன்றி சகோதரரே.

கடம்பவன குயில் said...

@ ஷர்புதீன்

//நிறைய எழுதுங்க., வாசிக்கிற பழக்க இருப்பவர்களால் அது முடியும்//


நன்றி சகோ. சுவாசிக்காமல் இருக்கச்சொன்னாலும் இருப்பேன். வாசிக்காமல் என்னால் இருக்கவே முடியாது.

கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

//நிலாக்காயும் நேரம் சரணம்...//

உலா போக ஹரியும் வரணும்

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நட்சத்திரங்களும் நிலவும் சூரியனும் பிரகாசிக்கிறது கவிதையில்..
வாழ்த்துக்கள்..

கடம்பவன குயில் said...

@ #கவிதைவீதி# சௌந்தர்

//நட்சத்திரங்களும் நிலவும் சூரியனும் பிரகாசிக்கிறது கவிதையில்..
வாழ்த்துக்கள்..//

நன்றி சகோதரரே. உங்களில் பாதியளவு கூட எழுத எனக்கு வரலையேனு ஒரு மனக்குறை எனக்கிருக்கிறது.

சி.பி.செந்தில்குமார் said...

>>கடம்பவன குயில் said...

@ சி.பி.செந்தில்குமார்

//நிலாக்காயும் நேரம் சரணம்...//

உலா போக ஹரியும் வரணும்

ஓஹோ அண்ணன் பேரு ஹரியா? இனி அண்ணியை போட்டு கலாய்ச்சு எடுத்திட வேண்டியதுதான்.. ஹா ஹா

கடம்பவன குயில் said...

@ சி.பி.

//ஓஹோ அண்ணன் பேரு ஹரியா? இனி அண்ணியை போட்டு கலாய்ச்சு எடுத்திட வேண்டியதுதான்.. ஹா ஹா//

அடப்பாவமே... தெரியாம எதிர்பாட்டு பாடி மாட்டிக்கிட்டேனா??

Link

Related Posts Plugin for WordPress, Blogger...