எப்படி மறப்பேனுனை நான்????
இவ்வுலகம் காணவந்த என்னை
இன்முகம் காட்டி வரவேற்று
உச்சிமுகந்த உனை........
எப்படி மற்பபேனுனை நான்!!
தன்முதலில் என் பிஞ்சுதேகம்
ஏந்தியதுன் கரங்களே........
முதலில் நான் ருசித்தது
தேனில் நனைத்த தாலிஉரசி
நீ தந்த செவ்வனையே.......
எப்படி மறப்பேனுனை நான்!!
தாயின் தர்மஅடியிலிருந்து
அவ்வப்போது காப்பாற்றி
இழுத்தோடும் உன்.....
அன்பு உள்ளம்தனை
எப்படி மறப்பேனுனை நான்!!!
ஊரார் கண்ணுபடுமென்று
ஊரடி மண்ணுடனே எப்போதும்
உலா வரும் உள்ளன்புமிக்க தேவதையே.....
எப்படி மறப்பேனுனை நான்!!!!வீட்டு விஷேசங்களில்
கையில் கம்புடன்
இனிக்கப்பேசி வேலைவாங்கும்
எங்கள் இல்ல இனிய குயிலே.....
எப்படி மறப்பேனுனை நான்!!!
சொந்த பந்தங்கள்
பிளவுபட்டு சிதறாமல்.....
தன் அன்பான அரவணைப்பால்
கட்டிக் காத்த கங்காருவே........
எப்படி மறப்பேனுனை நான்
பாட்டி வைத்தியம் முதல்
வாழ்க்கை வெற்றியின்
ரகசியம் வரை.........
சொல்லிக்கொடுத்துச் சென்றவளே!!
எமன் அழைத்தபோது மட்டும்
சொல்லாமல் சென்றதேன்??!!
எப்படி மறப்பேனுனை நான்!!.
* * * * *
Tweet | |||||
16 comments:
nice
@ சமுத்ரா
தங்கள் கருத்துக்கு நன்றி.
சொல்லிக்கொடுத்துச் சென்றவளே!!
எமன் அழைத்தபோது மட்டும்
சொல்லாமல் சென்றதேன்??!!
எப்படி மறப்பேனுனை நான்!//// அருமையான வரிகள் சகோ..
அசத்தல் கவிதை....
பொதுவாக அம்மாவை மையமாக வைத்துதான் கவிதைகள் வரும்..
பாட்டியை மைப்படுத்தி அவரின் நினைவுகளை கவிதையில் ஓட விட்டிருக்கீறீர்கள்...
தொடர்ந்து கவிதை தாருங்கள்.. வாழ்த்துக்கள்..
//தாயின் தர்மஅடியிலிருந்து
அவ்வப்போது காப்பாற்றி
இழுத்தோடும்//
எனக்கென்னமோ இருவருக்கும் இடையே ஒப்பத்தம் ஏதோ இருந்திருக்குமென்று தோன்றுகிறது. ஓங்கிய அடி விழாமல் தடுப்பது. ஆனால் பாட்டியிடம் சண்டையிட்டதே இல்லையா? கவிதைக்கு வாழ்த்துக்கள்.
@ வேடந்தாங்கல்-கருண்
//பொதுவாக அம்மாவை மையமாக வைத்துதான் கவிதைகள் வரும்..
பாட்டியை மைப்படுத்தி அவரின் நினைவுகளை கவிதையில் ஓட விட்டிருக்கீறீர்கள்...
தொடர்ந்து கவிதை தாருங்கள்.. வாழ்த்துக்கள்//
ந்ன்றி சகோதரரே. ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பாட்டியும் ஒரு நீங்காத இடத்தைபிடித்திருப்பார்.நம்முடைய சிறு வயதில் விடுமுறைனாலே பாட்டிவீடுதான் என்று பெரும்பாலானவர்களுக்கு வாய்ப்பு வாய்த்திருக்கும் என்று நினைக்கிறேன். எல்லோருமே பாட்டி செல்லமாத்தான் இருந்திருப்போ்ம். இல்லையா?
தங்களின் பாராட்டுக்கும் ஊக்கத்திற்கும் நன்றி.
@ சாகம்பரி
//எனக்கென்னமோ இருவருக்கும் இடையே ஒப்பத்தம் ஏதோ இருந்திருக்குமென்று தோன்றுகிறது. ஓங்கிய அடி விழாமல் தடுப்பது. ஆனால் பாட்டியிடம் சண்டையிட்டதே இல்லையா? கவிதைக்கு வாழ்த்துக்கள்.//
பேரன்பேத்திகள் எப்போதுமே பாட்டிகளின் செல்லம் இல்லையா? பாட்டிகளை நாம் திட்டினாலும் பெருந்தன்மையோடு நம்மை கண்டுக்காமல் போய்விடுவதால் சண்டை என்ற பேச்சுக்கே இடமிருக்காது.
உள்ளன்புமிக்க தேவதையே.....
எப்படி மறப்பேனுனை நான்!!!!
அருமையான வரிகள்
அன்னையர் வாழ்த்து போல அன்னையின் அன்னையின் புகழ்பாடல்..?
பொதுவா அம்மாவை விட பாட்டிக்குசிலர் செல்லமா இருப்பாங்க. நீங்க அந்த லிஸ்ட் போல..
கவிதை நீட் மேடம்
>>>>தன் அன்பான அரவணைப்பால்
கட்டிக் காத்த கங்காருவே........
படித்த கவிதையில் ரசித்த வரிகள்
@ இராஜராஜேஸ்வரி
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
தன் பேரன் பேத்திகள் மேல் ஊரார் கண்திருஷ்டி படக்கூடாது என்பதற்காக ரொம்பவே மெனக்கெடுவார்கள். குடும்பத்தில் விசேசம்என்றால் முன்னாடி நின்று சாமர்த்தியமாய் எல்லாரையும் நல்லாவே வேலை வாங்குவார்கள். கூட்டுகுடும்பத்தில் அதெல்லாம் நல்லா ஜாலியாய் ரசிக்கலாம்.
@ சி.பி.செந்தில்குமார்
//பொதுவா அம்மாவை விட பாட்டிக்குசிலர் செல்லமா இருப்பாங்க. நீங்க அந்த லிஸ்ட் போல.. //
10 வயதுவரை எல்லோருமே பாட்டி செல்லம்தான். பேரன்களுக்கு ஸ்பெசலாய் 20 வயது ஆனால்கூட செல்லம் கொடுக்கிற பாட்டி எல்லாம் இருக்காங்க. கூட்டுகுடும்பத்தில் அத்தை, மாமா,பெரியப்பா எல்லோரையும் ஒருவருக்கொருவர் மற்றவர்மேல் மனஸ்தாபம் வராமல் எவ்வளவுதூரம் சமாளிக்கமுடியுமோ சமாளித்து ஒற்றுமையை கொண்டுவந்துவிடுவார்கள். நிறைய குடும்பங்களில் பாருங்கள் பெரியவர்கள் காலத்திற்குபின் குடும்பமே சிதறிடும். எப்பவோ யார்வீட்டு விஷேசங்களிலாவது ஃபிளையிங் விசிட் அடிக்கறதோடு சரி.
>>>எப்பவோ யார்வீட்டு விஷேசங்களிலாவது ஃபிளையிங் விசிட் அடிக்கறதோடு சரி.
கமெண்ட்டில் கூட கவிதை வரிகள்.. ரசித்தேன்
@ சி.பி.செந்தில்குமார்
//கமெண்ட்டில் கூட கவிதை வரிகள்.. ரசித்தேன்//
உங்கள் அளவுக்கு நியூஸிலிருந்து பேட்டிவரை அனைத்துக்கும் நச்சுனு கமெண்ட்டையே பதிவா போட எனக்கு தெரியல. அடிக்கடி உங்க பதிவ படிச்சுதான் என் அறிவையே டெவலப் பண்ணிக்கறேன் குருவே.
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/
Post a Comment