
தொட்டால்தான் உடையுமென்பதற்கு
கண்ணாடியல்ல இதயம் .
உன் பார்வையம்புகள் பட்டமாத்திரத்தில்
பற்றிஎரிந்ததடி என் மனது.
பாவி உன்பின் ஓடி இணைந்ததடி
உன் உரிமையான என் இதயம்.
எத்தனை இரவுகள்
தூங்காதிருப்பினும் சரியே
தூங்குவதானால் இருவரும்
ஒருசேர தூங்கவேண்டும் என்றவளே,
என் இனியவளே ,
நீ மட்டும் இன்று.....
நீங்கா துயிலில் கல்லறையில்......
நானோ மீளாத் துயரில்
உன் நினைவில்.............
Tweet | |||||