தமிழுக்கு முதல் வணக்கம். முன்ன பின்ன யோசிக்காம என் வலைதளத்துக்குள் நுழைந்த நண்பர்கள் அனைவருக்கும் அடுத்த வணக்கம். நம்ம நண்பர்கள் நிறையபேர் வலைதளத்தை பார்த்தவுடன் எனக்கும் வலைத்தளம் தொடங்கும் விபரீத ஆசை வந்திருச்சுங்க. (ஐயோ பாவம் நீங்க!) என்ன பண்ண என்னோட கிறுக்கல்களையும் இனி நீங்க வாசித்து, போனாபோகுதுன்னு மன்னிச்சு விட்டுடுங்க. கணினிக்கே நான் கத்துக்குட்டிங்க. இப்போதான் தவழவே கத்துக்கிட்டுருகேன். ஐடியா சொல்லுங்க ஆவலுடன் கேட்டுக்கறேன். தப்ப சொல்லுங்க தவறாம திருத்திகறேன். கடவுள் வாழ்த்துகளுடன் பதிவை தொடங்குறேன். ஜூனியரை வாழ்த்தி வழி நடத்துங்கப்பா .

பொன்கதிர்களால் பொழுதை விடியச்செய்து
பொருள் இருப்பவர் இல்லாதவர் பேதமின்றி
பொன்னொளி வாரிவழங்கும் பகலவன்
பொன்னடிகள் போற்றி போற்றி.
அம்புலிக்கே தன்னொளி தந்து
ஈகைக்கே இலக்கணமான
ஈடில்லா இறைவனவன்
ஆதவன் அடிகள் போற்றி.
Tweet | |||||