அன்பு உள்ளங்களுக்கும் அருமை உறவுகளுக்கும் என் இனிய வணக்கங்கள். என் அரிதான வருகைக்கு உண்மையான காரணம் என் இணைய இணைப்பும் , மின்சாரமும் மற்றும் குடும்ப சூழ்நிலையும் தான். ஆனாலும் என் மௌனத்தை கலைத்து பதிவுப்பக்கம் வரத்தூண்டிய முக்கிய காரணி ”VERSATILE BLOGGER AWARD" . (THANKS TO SISTER YUVARANI TAMILARASAN, KIRUKALKAL BLOG) .
சகோதரி கிறுக்கல்கள் யுவராணி தமிழரசன் எனக்கு வழங்கிய இந்த விருதினை , என் பதிவுகளும் பிடித்துப்போய் (!) எனக்கு ஃபாலோயராக இணைந்து என்னை ஊக்கப்படுத்திய அன்பு தோழமைகளுக்கு சமர்பிக்கிறேன்.
மொய்க்கு மொய் கலாச்சாரத்துக்கு நடுவே, நான் தவிர்க்க இயலாத சூழ்நிலை காரணமாக உங்களையும் உங்கள் பதிவுகளையும் தொடரமுடியவில்லை என்றாலும் மொய் எதிர்பார்க்காமல் தொடர்ந்து எனக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்து என்னுடன் கைகோர்த்துள்ள என் பதிவுலக நட்புகளை நினைத்து பெருமைகொள்கிறேன். தலைவணங்குகிறேன்.
எனக்குப் பிடித்தவை:
1. மழை எனக்குப்பிடித்ததில் முதலிடம் வகிப்பது. மழையில நனைவது மிகவும் பிடிக்கும்.
2. வாசித்தல் சுவாசிக்காமல் கூட இருப்பேன். வாசிக்காமல் என்னால் இருக்க முடியாது. பதிவு எழுதுவதைவிட நண்பர்கள் பதிவை வாசிப்பது பிடிக்கும். தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள இது உதவும்.
3. ஆலயம் எனக்கு மிகவும் பிடித்த இடம். அமைதியான பழமையான ஆலயங்களில் அமர்ந்து தியானம் செய்வதும் ஆலயத்தின் கலைநயத்தை ரசிப்பதும் மிகவும் பிடிக்கும்
4. மலைவாசஸ்தலம். மலையும் மலைசார்ந்த இடமும் என்னைக் கவர்ந்தவை.
5. மெலடி பாடல்கள் மெல்லிய மெலடி பாடல்கள் கேட்கப் பிடிக்கும்.
6. மழலைகள் மழலைகள் குறும்புக்கு நான் அடிமை. மழலைகளுடன் நேரம் செலவிட பிடிக்கும.
இது எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் எல்லோரையும் எனக்கு ரொம்பப்பிடிக்குங்க........நம்புங்க ப்ளீஸ்......
பொதுவாக எனக்கு யாரையும் வெறுக்கத்தெரியாது. ஒருவரிடம் இருக்கும் தீய பழக்கங்களையும் மோசமான குணத்தையும் மட்டுமே வெறுக்கலாமே தவிர மனிதர்களை அல்ல.
இந்த விருதை நான் ஐந்து நண்பர்களுக்கு பகிர்ந்தளிப்பதில் பெருமையடைகிறேன்.
நான் விருதளிக்க ஆசைப்படும் வலைப்பூக்கள்:
1. கோகுல் மனதில் - கோகுல் மகாலிங்கம்
http://gokulmanathil.blogspot.in/2011/12/blog-post.html இவரது வலைப்பூவில்
விழிப்புணர்வூட்டும் கட்டுரைகளோடு காதல் கவிதைகள் , பாதித்த நிகழ்வுகள் என்று கலந்துகட்டி அடிப்பார். இந்த சிறிய வயதிலேயே இவரிடம் இருக்கும் சமுதாய அக்கறை என்னை வியக்கவைக்கிறது.
2. விழுதுகள் - மதுரை சரவணன் ஆசிரியர்
http://veeluthukal.blogspot.in/2012/01/blog-post_24.html மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுத்தலோடு ஆசிரியர் பணி முடிவடையாது. அவர்களின் மனவளத்திற்கும் ஆசிரியர்களே பொறுப்பு என்பதை ஆணித்தரமாக தன் பதிவுகளில் கூறும் இந்த ஆசிரியர் மிகமிக அபூர்வமான ஆசிரியர் என்பதில் பெருமைப்படுகிறேன்.
3. மாதவிப்பந்தல் - கண்ணபிரான் , ரவிசங்கர். (KRS)
http://madhavipanthal.blogspot.in/2012/02/blog-post.html தமிழின் பெருமையையும் ஆன்மிகத்தையும் இணைத்து அதிகம் விளையாடுமிடம் மாதவிப்பந்தல் .
4. வாங்க ப்ளாக்கலாம் - ஆனந்த் நாராயணன். ( அனந்து)
http://pesalamblogalam.blogspot.in/ இவருடைய கதைகள் , கவிதை, சினிமா விமர்சனம் போன்றவற்றிற்கு நான் ரசிகை.
5. வேர்களைத்தேடி - முனைவர் இரா. குணசீலன்
http://gunathamizh.blogspot.in/p/blog-page.html இவர் தன்னுடைய மாணவர்களின் படைப்புகளையும் திறமைகளையும் தன் பதிவின்மூலம் வெளிக்காட்டுபவர்.
Tweet | |||||
21 comments:
வாழ்த்துக்கள் .. விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் ..
விருது வாங்கிய உங்களுக்கும் , பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்
விருதுபெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!
@
அரசன் சே said...
//வாழ்த்துக்கள் .. விருது பெற்றமைக்கும் கொடுத்தமைக்கும் //
நன்றி நண்பரே தங்கள் வாழ்த்துக்கும் ஊக்கமளிக்கும் பண்பிற்கும்.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
//விருது வாங்கிய உங்களுக்கும் , பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
வே.சுப்ரமணியன். said...
//விருதுபெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே!//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.
விருது வாங்கிய உங்களுக்கும்...பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...
விருது பெற்றதற்கும் வழங்கியதற்கும் வாழ்த்துகள்.
வாசித்தல் சுவாசிக்காமல் கூட இருப்பேன். வாசிக்காமல் என்னால் இருக்க முடியாது. பதிவு எழுதுவதைவிட நண்பர்கள் பதிவை வாசிப்பது பிடிக்கும். தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள இது உதவும்.
விருது பெற்றதற்கு நிறைவான பாராட்டுக்கள்..
ஆலயம் , மெலடி பாடல்கள் , மழலை இவையெல்லாம் எனக்கும் பிடித்த விஷயங்களே ... விருது பெரும் அளவு எனக்கு தகுதி இருக்கிறதா என தெரியவில்லை ! இதை உங்கள் அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன் ... விருது அளித்தமைக்கும் , என் ரசிகையாய் ! இருப்பமைக்கும் மிக்க நன்றி ... அன்புடன் அனந்து ...
ரெவெரி said...
//விருது வாங்கிய உங்களுக்கும்...பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்...//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோ
Lakshmi said...
//விருது பெற்றதற்கும் வழங்கியதற்கும் வாழ்த்துகள்.//
நன்றி அம்மா.
இராஜராஜேஸ்வரி said...
//வாசித்தல் சுவாசிக்காமல் கூட இருப்பேன். வாசிக்காமல் என்னால் இருக்க முடியாது. பதிவு எழுதுவதைவிட நண்பர்கள் பதிவை வாசிப்பது பிடிக்கும். தெரியாத நிறைய விஷயங்களை தெரிந்துகொள்ள இது உதவும்.
விருது பெற்றதற்கு நிறைவான பாராட்டுக்கள்..//
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அம்மா
ananthu said...
//ஆலயம் , மெலடி பாடல்கள் , மழலை இவையெல்லாம் எனக்கும் பிடித்த விஷயங்களே ... விருது பெரும் அளவு எனக்கு தகுதி இருக்கிறதா என தெரியவில்லை ! இதை உங்கள் அன்பின் வெளிப்பாடாகவே கருதுகிறேன் ... விருது அளித்தமைக்கும் , என் ரசிகையாய் ! இருப்பமைக்கும் மிக்க நன்றி ... அன்புடன் அனந்து ...//
விருதை ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே. உங்களின் தன்னடக்கத்தை பாராட்டுகிறேன். உங்களின் படைப்புகளுக்கு இன்னும் மிகச்சிறந்த விருதுகள் பலவும் கிடைக்க வாழ்த்துக்கள் .
விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
அனைவருக்கும் வாழ்த்துகள்
என்னைப்பற்றிய உங்கள் சிறு விமர்சனத்துக்கு தலை வணங்குகிறேன்.இது போன்ற தட்டிக்கொடுத்தல்கள் இன்னும் நிறைய இது போல எழுத தூண்டும்.
அனைவருக்கும் வாழ்த்துகள்.நன்றி.
விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!மேலும் பல விருதுகளை பெற்று பெருமையடையவும் வாழ்த்துகிறேன்!
தாங்கள் விருது பெற்றமைக்கும் விருதினை
மிகச் சரியான பதிவர்களுக்கு
பகிர்ந்தளித்தமைக்கும் மனமார்ந்த நன்றி
விருதுக்கு வாழ்த்துக்கள் . நீங்கள் சொன்ன அனைத்தும் எனக்கும் பிடிக்கும்
விருது பெற்றமைக்கு எனது வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.தொடரட்டும் உங்கள் பணி
Post a Comment