Wednesday, 14 March 2012

நாம் தொலைத்து வரும் நம் பொக்கிஷங்கள்...!! (Missing-Traditional-Treasures)

ணக்கம் நட்புகளே..! நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் அனைவரையும் இப்பதிவின் மூலமாக சந்திப்பதில் அளவற்ற மகிழ்ச்சியடைகிறேன். 

ந்த புண்ணிய பாரத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமையடைகிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. ஆனால் நம் இந்திய மண்ணின் பெருமைகளான சித்த மருத்துவம், புராண காலத்திய தொழில் நுட்பங்களான விமானத்தின் முன்னோடி விசைகள், தர்ம சிந்தனைகள், தனி மனித ஒழுக்கம், வேதாந்த சாரம், நவ கோள்களின் கோலாட்டங்கள், சாரங்கள், அண்டவெளியின் சலனங்கள் பற்றிய நுட்பங்கள் மற்றும் முனிவர்கள் கண்டறிந்த மந்திரங்கள் அவற்றினால் மனித வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற அரிய பொக்கிஷங்கள் அனைத்தையும் நம் ஏமாளித்தனத்தினாலும் அறியாமையாலும் அன்னிய நாட்டினருக்கு தாரைவார்த்து விட்டு நிற்கிறோம். 
தாரை வார்த்த விஷயங்களையே திரும்ப ஏதோ ஒரு பெரிய அதிசயமான அதி அற்புதமான ஒன்றாக நினைத்து அவர்களிடமிருந்து வந்ததாய் எண்ணி நாம் அவற்றை கடைபிடித்து உபயோகித்து பெருமைபடுகிறோம். நம் சொந்த தாய்நாட்டில் நமக்கு சொந்தமான பொக்கஷங்கள்தான் அது என்பதையே அறியமுடியாத அப்பாவிகளாயிருப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை..!
ம் பாரத நாட்டின் மூலிகைகளும், அஷ்டாங்க யோகங்களும், நவ யாகங்களும் அந்நிய நாட்டிலிருந்து குப்பிகளில் அடைக்கப்பட்ட மருந்துகளாகவும் அக்குபஞ்சர் போன்ற மருத்துவ சிகிச்சைகளாகவும் அயல்நாட்டு காப்புரிமையோடு திரும்பி வருவதை பார்க்கும்போது மனம் வேதனையால் தவிக்கிறது.

இந்த நிலை மாற என்ன செய்யப் போகிறோம் நாம்???

னியும் இந்த நிலை தொடராமல் இருக்க வேண்டுமானால் நம் நாட்டின் பாரம்பரிய பெருமைகளை நாம் முதலில் உணர்வதோடு நம் இளைய சமுதாயத்தினர்களுக்கும் உணர்த்த வேண்டும். அரிய கலைகளையும் சக்திகளையும் அடைந்தவர்கள் மூடிமூடி தங்களுக்குள் அவற்றை வைத்திடாமல் நான்கு பேர் அறியும்படி அனைத்தையும் அனைவருக்கும் கற்றுககொடுக்கவேண்டும்.
ணம் சம்பாதிப்பது மட்டுமே நம் குறிக்கோளாயிருக்காமல் அதனோடு நாம் பிறந்த இந்த புண்ணிய தேசத்திற்கும் நம்மாள் இயன்ற கைமாறாக இந்திய திருநாட்டின் சிறப்புகளையும் பாரம்பரியத்தையும் போற்றி உலக மக்கள் அனைவரும் அறியும்படி பாரதத்தின் பெருமையை உயர்த்த பாடுபடவேண்டும். இல்லையேல் பாரதத்தாய் நம்மை மன்னிக்கவே மாட்டாள்.
(படங்கள்.- கூகுள் தேடுபொறிக்கு நன்றி)
ம் இந்திய திருநாட்டை உலகளவில் மிகமிக உன்னதமான நாடாக திகழச்செய்ய வேண்டியது நம் கடமை. அதற்கு ஆவன செய்ய ஒவ்வொருவரும் எடுத்துவைக்கும் முதல் அடியை நம் குடும்பத்திலிருந்து தொடங்க வேண்டும். அழிந்து வரும் நம் அரிய பண்டைய நுண்கலைகளை மருத்துவத்தை , நம் முனிவர்கள் மற்றும் முன்னோர்கள் புராணங்கள் வழியே நம்மிடம் விட்டுச்சென்ற நுட்பங்களை அணுவிஞ்ஞானம் முதல் ஆதவன் கதிர் விஞ்ஞானம் வரை உணர்ந்து இளைய தலைமுறைகளுக்கு்ம் அவற்றின் அருமைகளை விளக்கி பயன்படுத்தி காப்பாற்றச் செய்யவேண்டும்.

வாழ்க பாரதம்...! வளர்க பாரத பண்பாடு..!!
* * * * * * *

34 comments:

Unknown said...

நல்லதொரு முயற்சி! அனைவரும் முடிந்தவரை தொடர முயற்சிப்போம்!

கூடல் பாலா said...

அருமையான பதிவு!

சி.பி.செந்தில்குமார் said...

>>அழிந்து வரும் நம் அரிய பண்டைய நுண்கலைகளை மருத்துவத்தை , நம் முனிவர்கள் மற்றும் முன்னோர்கள் புராணங்கள் வழியே நம்மிடம் விட்டுச்சென்ற நுட்பங்களை அணுவிஞ்ஞானம் முதல் ஆதவன் கதிர் விஞ்ஞானம் வரை உணர்ந்து இளைய தலைமுறைகளுக்கு்ம் அவற்றின் அருமைகளை விளக்கி பயன்படுத்தி காப்பாற்றச் செய்யவேண்டும்.


நல்ல சிந்தனை...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்த புண்ணிய பாரத்தில் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமையடைகிறோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. //

அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
அதுவே உண்மை.

கடம்பவன குயில் said...

ரமேஷ் வெங்கடபதி said...

//நல்லதொரு முயற்சி! அனைவரும் முடிந்தவரை தொடர முயற்சிப்போம்!//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

கடம்பவன குயில் said...

koodal bala said...

//அருமையான பதிவு!//

நன்றி சார்.

கடம்பவன குயில் said...

சி.பி.செந்தில்குமார் said...

//நல்ல சிந்தனை...//

நன்றி சார்.

கடம்பவன குயில் said...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
அதுவே உண்மை.//

மிகவும் நன்றி ஐயா.

Praveenkumar said...

மிகவும் அருமையான கட்டுரைத் தொகுப்பு. நாம் மறந்துபோன மற்றும் நம்மால் மறக்கடிக்கப்பட்ட பல தகவல்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல பிரமாதமாக சொல்லியிருக்கீங்க.... வாழ்த்துகளுடன் பாராட்டுகள் சகோதரியே....!!! தொடரட்டும் தங்கள் மேலான சேவை. பகிர்வுக்கு நன்றி...!!!

அருள் said...

ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!

http://arulgreen.blogspot.com/2012/03/blog-post_14.html

குறையொன்றுமில்லை. said...

ஈரோட்டிலும் சிலவிஷயங்கள் பார்த்தேன் மருந்தில்லா மருத்துவம் என்று எல்லாவித உபாதைகளுக்கும் வைத்தியம் செய்து வருகிரார்கள் பலருக்கும் நல்ல குணம் தெரிவதாக ச்சொல்கிரார்கள். அதாவது அக்கு ப்ரெஷர் முறையில் முக்கியபுள்ளிகளில் அழுத்தம் கொடுத்து வியாதிகள் குணப்படுத்துகிரார்கள்.அதுவும் நல்லா இருக்கு

மகேந்திரன் said...

அருமையான ஒரு வஷயம்
நாமும் உணர்ந்து
நமக்கு முன்னும் பின்னும் உணரச் செய்வோம்...

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! நன்றி சகோதரி !

இராஜராஜேஸ்வரி said...

தாரை வார்த்த விஷயங்களையே திரும்ப ஏதோ ஒரு பெரிய அதிசயமான அதி அற்புதமான ஒன்றாக நினைத்து அவர்களிடமிருந்து வந்ததாய் எண்ணி நாம் அவற்றை கடைபிடித்து உபயோகித்து பெருமைபடுகிறோம்.

ஆதங்கப்படும் விஷயம்.. பகிர்வுக்கு பாராட்டுக்கள்..

ananthu said...

நாட்டுப்பற்றுடன் கூடிய தெளிவான பதிவுக்கு நன்றி !

Unknown said...

செய்வோம்

Yaathoramani.blogspot.com said...

தகர டப்பியின் அடிச் சப்தத்தில்
ஒரு நல்ல இசையை கவனிக்கத் தவறியதைப் போல
பொய்ப் பிரச்சாரங்களின் கவர்ச்சியில் நாம்
பல நல்ல விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டோம்
அனைவருக்குமான அருமையான பதிவை தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி

தக்குடு said...

எல்லாம் சரிதான், ஆனா இதை எல்லாம் சொன்னா சொல்றவனை பழையபஞ்சாங்கம்னு கேலி பேசதான் உலகம் தயாரா இருக்கு :(

கடம்பவன குயில் said...

பிரவின்குமார் said...

//மிகவும் அருமையான கட்டுரைத் தொகுப்பு. நாம் மறந்துபோன மற்றும் நம்மால் மறக்கடிக்கப்பட்ட பல தகவல்களை உள்ளங்கை நெல்லிக்கனி போல பிரமாதமாக சொல்லியிருக்கீங்க.... வாழ்த்துகளுடன் பாராட்டுகள் சகோதரியே....!!! தொடரட்டும் தங்கள் மேலான சேவை. பகிர்வுக்கு நன்றி...!//

நன்றி சகோ.

கடம்பவன குயில் said...

Lakshmi said...

//ஈரோட்டிலும் சிலவிஷயங்கள் பார்த்தேன் மருந்தில்லா மருத்துவம் என்று எல்லாவித உபாதைகளுக்கும் வைத்தியம் செய்து வருகிரார்கள் பலருக்கும் நல்ல குணம் தெரிவதாக ச்சொல்கிரார்கள். அதாவது அக்கு ப்ரெஷர் முறையில் முக்கியபுள்ளிகளில் அழுத்தம் கொடுத்து வியாதிகள் குணப்படுத்துகிரார்கள்.அதுவும் நல்லா இருக்கு//

அக்குபிரஷரில் வலிகள் மட்டும்தான் குறையும் என்று நினைத்திருந்தேன். வியாதிகள் குணமாவது எனக்கு புதுத்தகவல். நன்றி அம்மா.

கடம்பவன குயில் said...

மகேந்திரன் said...

//அருமையான ஒரு வஷயம்
நாமும் உணர்ந்து
நமக்கு முன்னும் பின்னும் உணரச் செய்வோம்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

கடம்பவன குயில் said...

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான பதிவு ! நன்றி சகோதரி !//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.

கடம்பவன குயில் said...

இராஜராஜேஸ்வரி said...

//தாரை வார்த்த விஷயங்களையே திரும்ப ஏதோ ஒரு பெரிய அதிசயமான அதி அற்புதமான ஒன்றாக நினைத்து அவர்களிடமிருந்து வந்ததாய் எண்ணி நாம் அவற்றை கடைபிடித்து உபயோகித்து பெருமைபடுகிறோம்.

ஆதங்கப்படும் விஷயம்.. பகிர்வுக்கு பாராட்டுக்கள்.//

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்ற அம்மா.

கடம்பவன குயில் said...

ananthu said...

//நாட்டுப்பற்றுடன் கூடிய தெளிவான பதிவுக்கு நன்றி !//

வருகைக்கு நன்றி சகோ.

கடம்பவன குயில் said...

விக்கியுலகம் said...

செய்வோம்//

நன்றி.

கடம்பவன குயில் said...

Ramani said...

//தகர டப்பியின் அடிச் சப்தத்தில்
ஒரு நல்ல இசையை கவனிக்கத் தவறியதைப் போல
பொய்ப் பிரச்சாரங்களின் கவர்ச்சியில் நாம்
பல நல்ல விஷயங்களைக் கவனிக்கத் தவறிவிட்டோம்
அனைவருக்குமான அருமையான பதிவை தந்தமைக்கு
மனமார்ந்த நன்றி//

வருகைக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி சார்.

கடம்பவன குயில் said...

தக்குடு said...

//எல்லாம் சரிதான், ஆனா இதை எல்லாம் சொன்னா சொல்றவனை பழையபஞ்சாங்கம்னு கேலி பேசதான் உலகம் தயாரா இருக்கு :(//

உண்மைதான் . ஆனாலும் நம்முடைய உரிமையையும் நம்முடைய சிறப்பான பாரம்பரியத்தையும் அடுத்தவர்கள் உரிமை கொண்டாட விடலாமா?? நம் மண்ணிற்காக கேலிகளை தாங்கிக்கொண்டாவது தொடர்ந்து சொல்வோம். இறுதியில் வெல்வோம்.

கடம்பவன குயில் said...

தக்குடு said...

//எல்லாம் சரிதான், ஆனா இதை எல்லாம் சொன்னா சொல்றவனை பழையபஞ்சாங்கம்னு கேலி பேசதான் உலகம் தயாரா இருக்கு :(//

உண்மைதான் . ஆனாலும் நம்முடைய உரிமையையும் நம்முடைய சிறப்பான பாரம்பரியத்தையும் அடுத்தவர்கள் உரிமை கொண்டாட விடலாமா?? நம் மண்ணிற்காக கேலிகளை தாங்கிக்கொண்டாவது தொடர்ந்து சொல்வோம். இறுதியில் வெல்வோம்.

ராஜி said...

தாய்நாட்டில் நமக்கு சொந்தமான பொக்கஷங்கள்தான் அது என்பதையே அறியமுடியாத அப்பாவிகளாயிருப்பதை நினைத்தால் நெஞ்சு பொறுக்குதில்லை..!
>>>
இது அப்பாவித்தனமில்லை தங்கச்சி. அலட்சியத்தனம். நமது அலட்சியத்தால் எவ்வ்ளவு இழந்துள்ளோம். இனி எவ்வளவு இழக்கப் போகின்றோம் என்பதை காலம்தான் பதில் சொல்லும்.

Thava said...

அருமையான பகிர்வுங்க சார்..தமிழனாக பிறந்ததில் எப்போதுமே பெருமை அதிகம்..மிக்க நன்றி.

சொந்தக்கதை சோகக்கதை : என் மன நினைவில்.ஓரு மரணம்..

மனோ சாமிநாதன் said...

அருமையான சிந்தனைப்பகிர்வு!

chicha.in said...

hii.. Nice Post

Thanks for sharing

...αηαη∂.... said...

ரொம்ப நல்லா இருக்கு தொடருங்க

...αηαη∂.... said...

ரொம்ப நல்ல பதிவு..,

Link

Related Posts Plugin for WordPress, Blogger...