Tuesday 24 May 2011

அழிக்க இயலாத கல்வெட்டுகள்..!!

நெஞ்சே இல்லா தந்தையின்
நெஞ்சுவலி நாடகத்தை நம்பி.......
அத்தை மகளை கரம்பிடித்து
ஆருயிரே உனைத் தொலைத்தேன்!
ஆனாலும்.......
என் ஆழ்மனதில்
உன் நினைவுகள்.......
ஆற்றுமணலின்
வண்டலென
மென்மையாய்.......
அழிக்க இயலாத
அழகான ஓவியமாய்..!

தலைமுறை இடைவெளியில்
தமையனுக்கும் தந்தைக்குமிடையில்
ஏச்சாலும் பேச்சாலும்........
மனமுடைந்து மரணம் யோசித்த தருணம்!
அன்பு வார்த்தைகளால் எனக்கு
புது உலகம் காட்டி
மறுவாழ்வு அளித்த
அன்பு தேவதையே......


என் மகளுடன்
நான் கொஞ்சும்
இந்தத் தருணம்......
நீயிட்ட உயிர்ப்பிச்சை!!

என் பெயரின்பின்
நானெழுதும் பட்டம்.....
அதற்கான உன் உழைப்பின்
ஞாபகங்களை கிள்ளிவிட்டுச்
செல்கிறது..!

என்னையும் உன்னையும்
பிரித்ததாய் எள்ளிநகையாடும்
இவர்களுக்குத் தெரியுமா..........
வானுக்கும் நிலவுக்கும்
பந்தம் பிரிக்க முடியாததென்பது........!
* * * * *

10 comments:

saro said...

உங்கள் பதிவு நன்றாக இருந்தது
செய்திகளை கீழே பதியவும்.



Share

கூடல் பாலா said...

ஆம் ...இத்தகைய கல்வெட்டுகளை யாருமே அழிக்க முடியாது !

செல்வா said...

ரொம்ப அருமையா இருக்குங்க. படங்களும் கவிதையின் கருப்பொருளும் உண்மைலேயே சூப்பர் :-)

கடம்பவன குயில் said...

@ koodal bala

நன்றிங்க கூடல் பாலா.

கடம்பவன குயில் said...

@ கோமாளி செல்வா

வாங்க செல்வா என்ன ரொம்ப நாளா லீவு விட்டுடீங்களா?

சிலவற்றை அழிக்கவே முடியாது. உண்மைதானே?..

Rathnavel Natarajan said...

நல்ல கவிதை.
வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் said...

வணக்கம். மிக்க நன்றி சகோதரரே

சாகம்பரி said...

nice kavithai.

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை ஓக்கே.. படம் செம கலக்கல்

அச்சுறுத்தல்களாலும், நாடகங்களாலும் காதல்கள் பிரிக்கப்படுகின்றன.

தக்குடு said...

Paravaaillaiyee, yenakku kooda kavithaiyoda artham puriyarthu!..:)) keep it up!

Note - Photo selection is refreshing reader's mind setup (srry for english typng, commenting from dffrnt sysytem)

Link

Related Posts Plugin for WordPress, Blogger...